உண்மை பரிசோதிக்கும் குழு
கட்டத்தின் மேற்கூரைக்கு வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிப்பதால் ஊடுருவும் வெப்பம் எவ்வளவு குறையும்?
கூரைக்கு வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிப்பதால் கட்டடத்திற்குள் ஊடுருவும் வெப்பம் குறைப்பதாக அறியப்படுகிறது. அப்படியானால் எவ்வளவு குறையும்?
ஒரு கட்டடத்தின் கூரைக்கு வெள்ளை நிறத்தில் பெயிண்ட்ட அடிப்பதால், சூரிய ஒளியை பிரதிபலிக்க செய்து, அந்த கட்டடத்திற்குள் ஊடுருவும் வெப்பத்தை குறைப்பதாக நீண்டகாலமாக அறியப்படுகிறது.
இவ்வாறு செய்வதால் தீமைகள் ஏதாவது உண்டா?
ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி-மூன் பிபிசிக்கு சமீபத்தில் அளித்த பேட்டியின்போது, கட்டடத்திற்குள் ஊடுருவும் வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கப்படலாம் என்றும், இதனால், கட்டத்தின் உள்ளே இருக்கின்ற 7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறையலாம் என்று கூறினார்.
இந்த புள்ளிவிபரங்கள் எங்கிருந்து வருகின்றன? பரவலாக நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த முடிவை தெரிவிக்கின்றனவா?
கோடைகால வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடிய இந்தியாவின் மேற்கிலுள்ள அகமதாபாத் நகரில் நடத்திய முன்னோடி பணித்திட்டம் பற்றி பான் கி-மூன் குறிப்பிட்டார்.
2017ம் ஆண்டு, வெள்ளை சுண்ணாம்பு மற்றும் ஒளியை பிரதிபலிக்கும் சிறப்பான மேல்பூச்சு கொண்டு அகமதாபாத் நகரின் 3,000 கூரைகளில் பெயிண்ட் அடிக்கப்பட்டன.
"குளிர்ச்சி தரும் கூரை" என்று அறியப்பட்ட இந்த திட்டம், சூரிய ஒளியின் வெப்பம் கட்டடத்திற்குள் கிரகிக்கப்படுவதை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இதன் மூலம், கட்டடத்திற்குள் மிக குறைவான வெப்பமே ஊருவும் என்று நம்பப்பட்டது.
இத்தகைய குளிர்ச்சி தரும் கூரைகள், ஒரு கட்டடத்திற்குள் இயல்பாக ஊடுருவி செல்லும் வெப்பத்தை சற்று குறைக்கிறது. இதனால் இந்த கட்டடம் சற்று குளிர்ச்சியாக இருக்கும்.
குஜராத்தில் செயல்படுத்தப்பட்ட இந்த பணித்திட்டத்தின் ஆவணமானது, சூரிய ஒளியை பிரதிபலிக்கும் கூரையின் மேல்பூச்சி, 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை குறைக்க உதவலாம் என்றும், கட்டடத்தின் உள்ளே தட்பவெப்பத்தை 3 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கலாம் என்றும் தெரிவித்தது.
ஆனால், இவை தகவல் இந்த திட்டத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட முடிவுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய கூரைகளோடு ஒப்பிடுகையில், அமைக்கப்பட்டுள்ளதை பொறுத்து குளிர்ச்சி தரும் கூரைகள் கட்டடத்தின் உள்ளே இருக்கும் தட்பவெப்ப நிலையை 2 முதல் 5 டிகிரி செலசியஸ் வரை குறைக்கலாம் என்கிறார் அகமதாபாத் பணித்திட்டத்தை மேற்பார்வை செய்த அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேசிய மூலவள பாதுகாப்பு கவுன்சிலை சோந்த அஞ்சலி ஜெய்ஸ்வால்.
பான் கி-மூன் தெரிவித்ததைவிட இந்த புள்ளிவிபரம் சற்று குறைவாக இருந்தாலும், கணிசமான குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தென் பகுதியில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இன்னொரு முன்னோடி பணித்திட்டத்தின் மூலம், குளிர்ச்சி தரும் கூரை மேல்பூச்சை பயன்படுத்துவது, கட்டடத்திற்குள் சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை குறைப்பதாக தெரியவந்தது.
கட்டடத்தின் உள்ளே 30 டிகிரி வரை தட்பவெப்பம் குறைவதாக பான் கி-மூன் தெரிவித்ததற்கே, குஜராத் முன்னோடி பணித்திட்டத்தில் எந்த விடையும் கிடைக்கவில்லை.
ஆனால், கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட பெர்கிலே ஆய்வகத்தின் ஆய்வு கண்டுபிடிப்புகளை கொண்டு, சில வழிகாட்டுதல்கள் நாம் பெறலாம்.
இந்த ஆய்வு, கோடைகால மதிய வேளையில், 80 சதவீத சூரிய ஒளியை பிரதிபலிக்கின்ற சுத்தமான வெள்ளை நிற கூரை, சுமார் 32 டிகிரி செல்சியஸ் குளிர்ச்சியை அளிக்கிறது என்று கண்டுபிடித்தது.
வெள்ளை நிற கூரையாக இருந்தாலும், உலோகம், ஆஸ்பெஸ்டாஸ், காங்கிரிட் போன்றவற்றால் செய்யப்பட்ட கூரைகள் 60 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் இந்தியாவில் காணப்படுவதைவிட கலிபோர்னியாவிலுள்ள கட்டடங்கள் நிச்சயமாக வேறுபட்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், அகமதாபாத், ஹைதராபாத் இரு இந்திய நகரங்களிலும் நடத்தப்பட்ட முன்னோடி திட்டத்தில் போதிய வெற்றி கிடைத்துள்ளது. இதனால், இந்த ஆண்டும் 'குளர்ச்சி தரும் கூரை' திட்டங்களை தொடங்கியுள்ளனர்.
ஏன் அதிக நகரங்களில் வெள்ளை நிறத்தில் கூரைகள் பெயிண்ட் அடிக்கப்படவில்லை?
இந்த சிந்தனை புதியதல்ல. ஐரோப்பாவின் தெற்கிலும், ஆப்பிரிக்காவின் வடக்கிலும், வெள்ளை நிற கூரைகளும், சுவர்களும் பல நூற்றாண்டுகளாக காணப்படுகின்றன.
நியூ யார்க் நகரம் சமீபத்தில் 10 மில்லியன் சதுரமீட்டர் கூரைகளை வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடித்துள்ளது.
கலிபோர்னியா போன்ற பிற இடங்கள், எரிசக்தியை சேமிக்கும் முக்கிய வழியாக பார்ப்பதால், குளிர்ச்சியான கூரைகளை கொண்டிருக்கும் கட்டடங்களை அமைப்பதை ஊக்குவிக்கும் குறியீடுகளை மேம்படுத்தியுள்ளன.
குளிர்ச்சி தரும் கூரை அமைக்கப்பட்டிருந்தால், காற்று குளிரூட்டியால் (ஏசி) ஏற்படும் செலவை 40 சதவீதம் குறைக்கலாம்.
இந்தியாவின் மத்தியிலுள்ள போபாலில் நடத்தப்பட்ட ஒரு சோதனையில், அதிக உயரமற்ற கட்டடங்களில் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தால், அதிகபட்ச தட்பவெப்பம் நிலவும் கோடைகாலங்களில் 303 கிலோவாட் மின்சாரத்தை சேமிப்பது தெரியவந்துள்ளது.
உலகிலுள்ள பெரிய நகரங்களிலுள்ள கட்டடங்களின் கூரைகளிலும் குளிர்ச்சி தரும் பெயிண்ட்கள் அடிக்கப்பட்டால் உலக கார்பன் வெளியேற்றம் குறைகிற சாத்தியம் காணப்படுவதாக மதிப்பீடுகளும் உள்ளன.
உலக அளவில் சூரிய ஒளியை பிரதிபலிக்கு கூரை பயன்படுத்தப்படுமானால் 24 கிகா டன் கார்பன் டை ஆக்ஸைட் வெளியேறுவதை குறைத்து உலக அளவில் அதிக குளிர்ச்சியை நிலவ செய்யும். இது 20 ஆண்டுகள் 300 மில்லியன் கார்களை சாலையில் ஓடவிடாமல் தடுப்பதற்கு சம்மான அளவாகும்.
குறிப்பாக, ஏழை நாடுகளுக்கு இந்த முயற்சி செலவு குறைந்த நடவடிக்கையாக இருக்கும்.
விலை உயர்ந்த சூரிய ஒளியை பிரதிபலிக்கும் கூரை மேல்பூச்சை விட சுண்ணாம்பு மேல்பூச்சை அடிப்பதற்கு ஒரு சதுரமீட்டருக்கு ரூ. 1.5 இந்தியாவல் அதிகமாக இருக்கலாம் என்று ஜெய்ஸ்வால் தெரிவிக்கிறார்.
இதற்கான வித்தியாசம் தனிப்பட்ட வசதியிலும், குளிர்ச்சி நிலவி மின்சாரம் சேமிக்கப்படுவதிலும் வெளிப்படும்.
ஒட்டுமொத்தத்தில், "அரசியல் நிலைப்பாடும், நடைமுறைப்படுத்துவதும் பெரும் பங்காற்றுகின்றன" என்கிறார் ஜெய்ஸ்வால்.
இந்த நடவடிக்கை செயல்படுத்தும்போது, இன்னொரு பக்கமும் இருக்கிறது. அதாவது, இந்த நகரங்களில் குளிர்காலத்தில், பிரதிபலிக்கும் கூரையுடைய கட்டடங்களில் அதிக வெப்பம் தேவைப்படலாம். இதனால், கூரை அமைப்பில் ஆபத்து ஏற்படும் கவலையும் எழலாம்.
இதன் காரணமாகதான், புது டெல்லியில் மீள்குடியேற்ற காலனி பணித்திட்டத்தில் வெள்ளை நிற பெயிண்டை அடிப்பதில்லை என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி முடிவு செய்தது.
"கட்டடங்களின் மேல்கூரை வேறு பல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதால், இந்த கூரைகளின் மீது வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க குடியிருப்புவாசிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்" என்கிறார் டெல்லியை தலைமையிடமாக கொண்டு பணிபுரியும் ஊடக மற்றும் பிராந்திய வளர்ச்சி மையத்தின் ரெனு கோஸ்லா.
அதிக பிரதிபலிப்பை ஏற்படுத்தும் கூரைகள், பொருட்கைள வைத்து இடத்தை பயன்படுத்துவதையும், அன்றாட வீட்டு வேலைகளை செய்வதையும் கடினமாக்குகின்றன என்றும் அவர் கூறுகிறார்.
No comments:
Post a Comment