Saturday, December 31, 2016

நகர்ப்புறவியம் (Urbanism)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நகர்ப்புறவியம் (Urbanism) என்பது, நகர்ப்புற மக்கள் கட்டிடச் சூழலுடன் கொண்டுள்ள சிறப்பியல்பான தொடர்பாடலைக் குறிக்கிறது. இன்னொரு வகையில் சொல்வதானால், இது, நகர்ப்புற வாழ்வோடு சிறப்பாகப் பிணைந்துள்ள மனநிலை, வழக்காறுகள், மரபுகள், மனப்போக்குகள், உணர்வுகள் போன்றவை ஆகும். நகரங்களின் புவியியல்பொருளாதார, சமூக, பண்பாட்டு வெளிப்பாடுகளையும், கட்டிடச் சூழல் மீது இவை அனைத்தினதும் ஒன்றிணைந்த தாக்கங்களையும் உட்படுத்தி நகரங்களை ஆய்வு செய்யும் துறையாகவும் இது உள்ளது.

கோட்பாடு[தொகு]

தற்காலத்தில், பல கட்டிடக்கலைஞர்களும், திட்டமிடலாளரும், சமூகவியலாளரும் மக்கள் செறிந்து வாழும் நகர்ப்புறங்களில் மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பது குறித்துப் பல கோணங்களில் இருந்து ஆய்வு செய்து வருகின்றனர். நகர்ப்புறவியம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு, நகர்ப்புறவியத்தை நகரத்தின் பௌதீக அம்சத்துடன் அடையாளம் காண்பதை நிறுத்த வேண்டும் எனவும், மேலெழுந்தவாரியான எல்லைகளுக்கும் அப்பால் சென்று, தொழில்நுட்பதொலைத்தொடர்பு வளர்ச்சிகள் எவ்வாறு நகர வாழ்க்கை முறையை நகரங்களுக்கும் அப்பால் விரிவாக்கியுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் லூயிசு வர்த் (Louis Wirth) என்பவர் கூறுகிறார்.[1]

நகர்ப்புறவியத்தின் பல்வேறு வடிவங்கள்

பால் நாக்சு (Paul Knox) என்பவர் தான் எழுதிய நகரங்களும் வடிவமைப்பும் (Cities and Design) என்னும் நூலில் தற்கால நகர்ப்புறவியத்தின் பல போக்குகளில் ஒன்றாக "அன்றாட வாழ்க்கையை அழகுள்ளது ஆக்கல்" என்பதைக் குறித்துள்ளார்.[2] அலெக்சு கிறீகர் (Alex Krieger) என்பவர் நகரத் திட்டமிடல், வடிவமைப்பு என்பன தொடர்பான வல்லுனர்கள், எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக நகர்ப்புறவியக் கோட்பாடுகளை ஆய்வு செய்துள்ளார். இவர் தற்காலத்தில் நகர்ப்புறவியம் பத்து விதமான வழிகளில் பயன்படுத்தப்படுவதை அடையாளம் கண்டுள்ளார்.[3] அவையாவன:
  1. திட்டமிடலுக்கும் கட்டிடக்கலைக்கும் இடையிலான இணைப்பு
  2. பொதுக் கொள்கையில் வடிவ-அடிப்படையிலான வகைப்பாடு
  3. நகரக் கட்டிடக்கலை
  4. நகர வடிவமைப்பை மீளமைப்பு நகர்ப்புறவியமாகக் கொள்ளல்
  5. நகர வடிவமைப்பை இட உருவாக்கத்துக்கான கலையாகக் கொள்ளல்
  6. நகர வடிவமைப்பைத் சூட்டிகை வளர்ச்சியாகக் (smart growth) கொள்ளல்
  7. நகர உட்கட்டமைப்பு
  8. நகர வடிவமைப்பை நிலத்தோற்ற நகர்ப்புறவியமாகக் கொள்ளல்
  9. நகர வடிவமைப்பைத் தொலைநோக்கு நகர்ப்புறவியமாகக் கொள்ளல்
  10. நகர வடிவமைப்பைச் சமூகச் சார்பு வாதமாகக் கொள்ளல்

சூழலியல் நகர்ப்புறவியம் (ecological urbanism) என்பது, சூழலியலின் அடிப்படையில் சமூகம் சார்ந்ததும், சூழலைக் கவனத்தில் கொள்வதுமான ஒரு நகர்ப்புறவியம் ஆகும். இது நகர வடிவமைப்புநகரத் திட்டமிடல் ஆகியவற்றின் கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் சூழலியல் மற்றும் காலநிலையியல்நீரியல்புவியியல்உளவியல்வரலாறுகலை போன்ற பல்வேறு சூழல் சார்ந்த துறைகளுடன் இணைக்கின்றது. இது, பசுமை நகர்ப்புறவியம்தாங்குநிலை நகர்ப்புறவியம் போன்ற நகர்ப்புறவிய வகைகளிலும் பார்க்கக் குறைந்த அளவான கருத்தியல் அடிப்படையில் இயங்குகிறது. சூழலியல் நகர்ப்புறவியம் பல வழிகளிலும் நிலத்தோற்ற நகர்ப்புறவியத்தில் இருந்து வளர்ச்சியடைந்தது என்பதுடன் அதனை விமர்சிப்பதாகவும் உள்ளது. இது நகர வடிவமைப்பிலும் அதன் மேலாண்மையிலும் முழுதளாவிய அணுகுமுறை ஒன்றின் தேவையை வலியுறுத்துகிறது.
"சூழலியல் நகர்ப்புறவியம்" என்பதற்கு ஈடான "ecourbanismo" (எக்கோஏர்பனிஸ்மோ) என்னும் சொல் கட்டிடக்கலைஞரான மிகுவேல் ருவானோ (Miguel Ruano) என்பவர் எழுதிய எசுப்பானிய மொழி நூலொன்றில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர், 2003 ஆம் ஆண்டில் ஒரிகோன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாநாட்டில் இதற்கிணையான Ecological urbanism (எக்கோலாஜிக்கல் ஏர்பனிசம்) என்னும் ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்பட்டது.

பசுமை நகர்ப்புறவியம் (green urbanism) என்பது, மனிதருக்கும், சூழலுக்கும் நன்மை பயக்கக்கூடிய சமூகங்களை உருவாக்கும் ஒரு நடைமுறை ஆகும். இது கூடிய தாங்குநிலையோடு கூடிய இடங்களையும், சமூகங்களையும், வாழ்க்கை முறைகளையும் எற்படுத்துவதற்கான ஒரு முயற்சி. பசுமை நகர்ப்புறவியம் உலக வளங்களைக் குறைவாகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பசுமை நகர்ப்புறவியம் பல்துறை சார்ந்தது. இது, கட்டிடக் கலைஞர்கள், நகர வடிவமைப்பாளர்கள் ஆகியோருடன், நிலத்தோற்றக் கலைஞர், பொறியாளர்கள், நகர்ப்புற வடிவமைப்பாளர், சூழலியலாளர், போக்குவரத்துத் திட்டமிடலாளர், இயற்பியலாளர், சமூகவியலாளர், பொருளியலாளர் போன்றோரின் கூட்டு முயற்சியை உள்ளடக்கியது.

நகரமயமாதலும் சுற்றுச் சூழல் அழிவும்[தொகு]

நகரமயமாதலும், சுற்றுச் சூழல் அழிவும் எப்பொழுதும் ஒன்றாகவே இடம் பெறுகின்றன. 1989ல் ஒடும் (Odum) என்பவர் நகரங்கள் உணவு உற்பத்தியில் ஈடுபதுவது இல்லை என்பதால் அவை இயற்கை மற்றும் செய்கை பண்ணப்படும் சூழல்களில் தங்கியுள்ள ஒட்டுண்ணிகள் என வர்ணித்தார். இவ்வாறான இசைவற்ற தன்மையின் விளைவாக சூழலுக்குப் பேரழிவாக அமையக்கூடிய நிகழ்வுகள் இடம்பெறக்கூடும் என்றார் மயுர் (1990)

தாங்குநிலை நகர்ப்புறவியம் என்பது, நகரங்களின் வடிவமைப்புதிட்டமிடல், நிர்வாகம் ஆகியவற்றில் தாங்குநிலைக் கொள்கைகளைப் பயன்படுத்தும் நகர்ப்புறவியம் ஆகும். உலகெங்கெலும் உள்ள பல அரச அமைப்புக்கள், அரசுசாரா அமைப்புக்கள், உயர்தொழிற் கழகங்கள், உயர்தொழில் நிறுவனங்கள் போன்றவை தாங்குநிலை நகர்ப்புறவியத்தை முன்னெடுத்துச் செல்வதுடன் இதன் நடைமுறைகள் தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளன. சூழலியல் நகர்ப்புறவியம்பசுமை நகர்ப்புறவியம்நிலத்தோற்ற நகர்ப்புறவியம் போன்ற நகர்ப்புறவிய இயக்கங்கள் தாங்குநிலை நகர்ப்புறவியத்தோடு தொடர்புள்ளவை.
தாங்குநிலை நகர்ப்புறவியம், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நகர வளர்ச்சியினால் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை நீக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. இது, எல்லா உற்பத்திப் பொருட்களும் தாங்குநிலையைக் கவனத்தில் கொண்டு செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக அவற்றின் முழு வாழ்க்கை வட்டத்தையும் கவனத்திற் கொள்கிறது. மின் உற்பத்தி, உணவு உற்பத்தி போன்றவற்றையும் நகருக்குள்ளேயே கொண்டு வருவதைத் தாங்குநிலை நகர்ப்புறவியம் வலியுறுத்துகிறது. நகரங்களின் தேவைகள் அனைத்தையும் அங்கேயே பெறத்தக்க வகையில், தாங்குநிலை கொண்டவையாகவும், தன்னிறைவு கொண்டவையாகவும் இருக்கவேண்டும் என்பதை இது குறிக்கின்றது.

தாங்குநிலை நகர்ப்புறவியத்தின் கூறுகள்[தொகு]

  • நெருக்கம்
  • மனிதனுக்கு இயற்கையின் மீதும் பிற உயிர்கள் மீதும் உள்ள இயல்பான ஒட்டுறவு
  • தாங்குநிலைப் பாதைகள்
  • உயர் திறன் கட்டிடங்கள்
  • உயர்திறன் உட்கட்டமைப்பு

புதிய நகர்ப்புறவியம் (new urbanism) என்பது ஒரு நகர்ப்புற வடிவமைப்பு இயக்கம். பல்வேறு வகையான வீடமைப்புக்களையும், தொழில் வகைகளையும் உள்ளடக்கியதான நடந்தே பல வசதிகளையும் அணுகக்கூடிய அயல்களை (neighborhood) உருவாக்குவதை இந்த இயக்கம் முன்னெடுக்கின்றது. இது 1980களில் ஐக்கிய அமெரிக்காவில் உருவானது. படிப்படியாக இது நகரத்திட்டமிடல், நகர நிலப் பயன்பாட்டுக் கொள்கை என்பன தொடர்பான பல அம்சங்களை வெளிப்படுத்தியது.
புதிய நகர்ப்புறவியம், 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முந்திய தானுந்துகள் புழக்கத்துக்கு வராத காலப்பகுதியின் வடிவமைப்புத் தரங்களின் செல்வாக்குக்கு உட்பட்டது. இது, மரபுவழி அயல் வடிவமைப்புபோக்குவரத்து நோக்கு வடிவமைப்பு போன்ற கொள்கைகளை உட்படுத்துகிறது. பிரதேசவியம்சூழல்வாதம்சூட்டிகை வளர்ச்சி (smart growth) போன்ற கருத்துருக்களுடன் இதற்கு நெருக்கமான தொடர்பு உண்டு.

நிலத்தோற்ற நகர்ப்புறவியம் (Landscape urbanism) என்பது, நகர்ப்புறத் திட்டமிடலின் ஒரு கோட்பாடு ஆகும். கட்டிடங்களை வடிவமைப்பதின் ஊடாக அன்றி, நகரின் நிலத்தோற்றத்தை வடிவமைப்பதின் ஊடாகவே நகரங்களைச் சிறப்பாக ஒழுங்கமைக்கலாம் என்பது இதன் கொள்கை. இக்கோட்பாடு தொடர்பில், நிலத்தோற்ற நகர்ப்புறவியம் என்னும் பொருள் கொண்ட "Landscape Urbanism" (லான்ட்ஸ்கேப் ஏர்பனிசம்) என்னும் ஆங்கிலத் தொடர் 1990களில் முதன் முதலில் தோன்றியது. அதைத் தொடர்ந்து இத்தொடர் பல்வேறுபட்ட பயன்பாடுகளுக்கு உட்பட்டது. ஆனால், பெரும்பாலும் புதிய நகர்ப்புறவியத்தின் தோல்விகளுக்குப் பின்-நவீனத்துவத்தின் ஒரு பதிலாக இது பார்க்கப்பட்டது.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

சண்டிகர் - நவீன இந்தியாவின் முதல் ‘திட்டமிட்ட நகர வடிவமைப்பு’!

வடமேற்கு இந்தியாவில் ஷிவாலிக் மலையடிவாரத்தில் இந்த சண்டிகர் எனும் யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது. இது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைநகரம் எனும் விசேஷமான அடையாளத்தை கொண்டுள்ளது. சண்டி எனும் ஹிந்து கடவுள் வீற்றிருக்கும் ஸ்தலம் என்பதால் இதற்கு ‘சண்டிகர்’ எனும் பெயர் வந்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட பெருநகரம் எனும் பெருமையும் இதற்குண்டு.
சண்டிகர் புகைப்படங்கள் - 'ஒப்பன் ஹாண்ட்' நினைவுச் சின்னம்

சண்டிகர் புகைப்படங்கள் - 'ஒப்பன் ஹாண்ட்' நினைவுச் சின்னம் 

பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் பஞ்சாப் மாநிலத்திற்கான புதிய தலைநகர் பற்றிய அவசியம் ஏற்பட்டபோது அப்போதைய பிரதமரான பண்டித ஜவகர்லால் நேரு ஒரு புதிய நவீன நகரத்தை நிர்மாணிக்க விரும்பினார்.
அவரது திட்டப்படி பிரபல ஃபிரெஞ்சு கட்டிடக்கலை நிபுணரும் நகர வடிவமைப்பாளருமான ‘லெ கொர்புசியர்’ என்பவர் இந்த சண்டிகர் நகரத்தை 1950களில் வடிவமைத்து நிர்மாணித்தார்.
1966ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்த நவீன நகரம் ஒரு தனிப்பட்ட யூனியன் பிரதேசமாகவும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரமாகவும் அறிவிக்கப்பட்டு உருவம் பெற்றது.
சண்டிகர் மற்றும் சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்கள்

சண்டிகர் நகரத்தில் ‘லெ கொர்புசியர்’ சிருஷ்டித்த கலைப்படைப்புகளில் ஒன்றாக ‘தி ஓபன் ஹான்ட்’ என்றழைக்கப்படும் சின்னம் ஒன்று கேபிடோல் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
நீதிமன்றம், ஆட்சிமன்றம், சட்டமன்றம் ஆகியவை இந்த வளாகத்தில்தான் அமைந்துள்ளன. சண்டிகர் நகரத்தில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாக ராக் கார்டன் எனும் பூங்கா பிரசித்தமாக அறியப்படுகிறது.
இண்டர்நேஷனல் டால்ஸ் மியூசியம் மற்றும் கவர்ண்மென்ட் மியூசியம் போன்றவையும் இங்கு தவறவிடக்கூடாத சுற்றுலா அம்சங்களாகும்.
சண்டிகர் நகரத்தின் வடபகுதியில் உள்ள பெரிய வனப்பகுதி காட்டுயிர் ரசிகர்களை பெரிதும் கவரும் அம்சமாக வீற்றுள்ளது. கன்சால் மற்றும் நேப்லி காடுகளில் பல்வகையான உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் காணப்படும் இயற்கைப்பிரதேசமாக புகழ் பெற்றுள்ளன.
இவை தவிர சுக்னா காட்டுயிர் சரணாலயமும் இங்கு முக்கியமான இயற்கைச்சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. சுக்னா ஏரிக்கான நீர்ப்பிடிப்புப்பகுதியாக விளங்கும் இந்த வனச்சரகம் ஏராளமான பாலூட்டி விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன உயிரினங்களை கொண்டுள்ளது.
சண்டிகருக்கு அருகில் உள்ள மொஹாலி எனும் இடத்தில் சாத்பிர் வனவிலங்குக்காட்சியகம் ஒன்றும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது. ரோஸ் கார்டன் மற்றும் குருத்வாரா கூஹ்னி சாஹிப் ஆகியவை சண்டிகர் நகரத்தின் இதர சுற்றுலா அம்சங்களாகும்
எப்படி செல்வது சண்டிகருக்கு

நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் விமான, ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சண்டிகர் நகரை வந்தடையலாம். சண்டிகர் விமான நிலையம் நகர மையத்திலிருந்து 8 கி.மீ அமைந்துள்ளது.
17-வது செக்டார் பகுதியில் ரயில் நிலையம் உள்ளது. மேலும் வெளி மாநிலப்பேருந்துகளுக்கான இரண்டு பேருந்து நிலையங்கள் செக்டார் 17 மற்றும் செக்டார் 43ல்  அமைந்துள்ளன.
எப்போது விஜயம் செய்யலாம்

செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான பருவம் சண்டிகருக்கு பயணம் மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.

http://tamil.nativeplanet.com/chandigarh/

நகர வடிவமைப்பு

அட வேற ஒன்னுமில்ல urban planning இன் தமிழாக்கம் தான் இது.நகர வடிவமைப்பு என்பது அறிவியலும் கலையும் கலந்த கலவை.இன்னும் சுருக்கமாகச் சொன்னால் அனைத்து நகரத் தேவைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது........இது சொல்வதற்கு சுலபமாகத் தோன்றினாலும் மிகக் கடினமான வேலை......
இது ஒரு புதிய துறை 19ஆம் நூற்றாண்டின் பாதியில் தான் பிரபலமானது.முதலில் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் அனைவருக்கும் ஒரே இடத்தில் வீடுகள்,பள்ளிகள்,விளையாட்டுத்திடல்கள்,வணிக வளாகங்கள் இன்னும் பல வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டது.இதுதான் பின்னாளில் URBAN PLANNING கு வழி வகுத்தது.
நன்றாக வடிவமைக்கப்பட்ட சில நகரங்கள்:





http://esec-civil.blogspot.com/2010/04/blog-post_11.html

Thursday, December 29, 2016

நகர வடிவமைப்பு

நகர வடிவமைப்பு என்றால் என்ன? 


பல்வேறுவகையான விளக்கங்கள் அல்லது வரையறைகள் இருக்கின்றன. இருப்பினும்  நகரத்தை, அல்லது பட்டினத்தை அல்லது கிராமத்தை வடிவமைக்கும் அல்லது சீராக்கும் செயல்முறை என்று கூறலாம். கட்டடக்கலை ஒரு இடத்தில் உள்ள கட்டடத்தை பற்றி கவனம் செலுத்தும் வேளையில் நகர வடிவமைப்பு கட்டங்களின் தொகுதி, வீதிகள், ஒரு பகுதியில் உள்ள கட்டடங்களின் கூட்டம், பூங்காக்கள், மக்கள் கூடும் திறந்த வெளிகள், முழுநகரம் எல்லாவற்றையும் இணைத்து நிலைத்து நின்று கவர்ச்சியாக பொருத்தமான வகையில் இயங்குதிறனுள்ளதாக எவ்வாறு ஒருங்கிணைத்து திறம்பட இயங்க வைக்கலாம்  என்பதை செய்வதாகும். இதற்கு கட்டடக்கலை மற்றும் சமூக இயக்கம் பற்றிய அறிவு அத்தியாவசியமாகும். 

நகர வடிவமைப்பிற்கான எல்லைகள்

பின்வரும் 6 விடயங்கள் நகர வடிவமைப்பை வரையறுக்கின்றன
1. வரலாற்றைப் பேணி நகரத்தைப் (தாவரங்கள், உயிரினங்கள் இயற்கையான இடம், முக்கியமான மற்றும் இரசிக்ககூடிய பழைய கட்டடங்கள்.....)குறிப்பாக மக்களின் நடவடிக்கையில் இருந்து பாதுகாத்தல்.
2. பாதசாரிகளுக்காக வடிவமைத்தல்
3. சக்தியையும் பலத்தையும் தரக்கூடிய பல்வேறு வகையான பாவனை
4. கலாசாரச் சூழல்
5. சூழலின் அமைவிடம்
6. கட்டடக்கலை வடிவமைப்பிற்கான பின்னணி

நகர வடிவமைப்பினை விபரிப்பதற்கு பின்வரும் 8 தன்மைகள், இலக்குகள் மற்றும் பிரதான தத்துவங்களை  குறிப்பிடமுடியும்

1. இடம்
2.அடர்த்தி
3.பல்வேறு வகையான பொருத்தமான பாவனை
4.வாகனங்கள் அனுமதிக்கப்படாத இடங்களும் மனிதர்களுடைய பிரமாணங்களும்
5. மனித கலாசாரம்
6. பொது மக்களின்பாவனைக்கான வீதிகள், நடை பாதகைகள், பூங்காகக்கள், திறந்தவெளிகள், பொதுமக்கள்  கட்டடங்கள் மற்றும் சேவைகள்
7.கட்டடச்சூழல்
8. இயற்கைச்சூழல்

நகர வடிவமைப்பின் 7 பிரதான அம்சங்கள்

1.மக்களுக்கான இடங்கள்
இடமானது நன்றாக விரும்பக்கூடிய நல்ல பாவனைக்காக இருக்க வேண்டும். இவை பாதுகாப்பான, வசதியான பல்வேறுவகையான மற்றும் கவர்ச்சியானதாக இருக்கவேண்டும். அவை ஏனைய இடங்களில் இருந்து வேறுபட்டதாகவும்  மக்களுக்கு பல்வேறு களிப்புகளை வழங்கக்கூடியதாகவும், மக்கள் சந்திப்பதற்கு சந்தர்பங்களை வழங்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். வீதிகளில் இருந்து விளையாட உலகம் நகருவதை  இரசிக்ககூடியதாக இருக்கவேண்டும்.

2. ஏற்கானவே இருப்பதை மெருகூட்ட வேண்டும்
புதிய அபிவிருத்திகள் ஏற்கனவே உள்ள இடங்களை மெருகூட்ட வேண்டும். அதாவது அமைவிடத்தில் இயல்பாக வரக்கூடிய புதிதாக வெளிவரும் ஏனைய இடங்களிலும் பார்க்க வேறுபட்ட செயற்பாடுகளை  ஊக்கப்படுத்தவேண்டும். இது பிராந்தியம், நகரம், பட்டினம், அயல் மற்றும் வீதிகள் போன்ற எல்லா மட்டங்களிலும்  பிரயோகிக்கப்படும்.

3. தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்
இடங்கள் இலகுவில் அடையக்கூடியதாகவும், பௌதீக ரீதியாகவும், பார்வை ரீதியாகவும் சுற்றுப்புறத்துடன் இணைய  வேண்டும்.  குறித்த இடத்திற்கு எவ்வாறு கால்நடையாக, துவிச்சக்கர வண்டியில், பொது போக்குவரத்தில், மற்றும் பிரத்தியோகமாக சேர முடியும் என்பதில்  கவனம் கொள்ள வேண்டும்.

4. நில வடிவமைப்புடன் வேலை செய்தல்
இடங்களானது மனித உருவாக்கங்களுக்கும் இயற்கைக்கும் இடையில் சமநிலை பேணி, இந்த இடங்களில் உள்ள  காலநிலை, நிலவமைப்பு, நிலதோற்றம் மற்றும் இயற்கைக்கு டையிலான தொடர்புகளைப் பயன்படுத்தி சக்தி  பேணுதலையும், மக்கள் அதிகம்பயன்படுத்தும் வகையிலும் உபயோகிக்க வேண்டும்.

5. பல்வேறு பாவனையும், வடிவங்களும்
புதிய தூண்டல்களை ஏற்படுத்த கூடிய இரசிக்க கூடியவசதியான இடங்கள் பல்வேறு  மனிதக்குழுக்களுக்களாலும் ஏற்படுத்தப்படும் தேவைகளை நிறைவேற்றும். அவை மேலும் பல்வேறு கட்டட  வடிவங்கள், பாவனைகள், உரிமங்கள் மற்றும் மக்களின் அடர்த்தி என்பவற்றால் பின்னப்பட்டிருக்கும்.

6. முதலீட்டினை முகாமைத்துவம் செய்தல்
திட்டங்கள் விருத்தி செய்யக்கூடியதாக மற்றும் நன்கு கவனிக்க கூடியதாக இருப்பதற்கு அவை பொருளாதார  சாத்தியமுள்ளதாகவும், நன்கு முகாமைத்துவம் மற்றும் பராமரிக்க கூடியதாகவும் இருக்கவேண்டும். அதாவது வடிவமைப்பின் ஒரு பகுதியாக  அபிவிருத்தியாளர்களின் சந்தையை கருத்தில் எடுத்தல், சமூக மற்றும் உள்ளுர்  அதிகாரசபையின் நீண்டகால ஈடுபாடு, பொருத்தமான வழங்கல் பொறிமுறையை தீர்மானித்தல்.

7. மாற்றத்திற்கான வடிவமைப்பு
புதிய அபிவிருத்திகள் எதிர்கால பாவனையில், வாழ்க்கை முறை மற்றும்  குடித்தொகையில் ஏற்படும் மாற்றங்கள்  போன்றவற்றை எதிர்கொள்வதற்கு நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அதாவது சக்தி மற்றும் வள உச்சப்பயன்பாட்டிற்கு வடிவமைத்தல், சொத்துக்கள், பொது இடங்கள், பொதுச்சேவைகள் என்பவற்றின்  பயன்பாட்டில் நெகிழ்வுத்தன்மைகளை அறிமுகம் செய்தல், போக்குவரத்து, வாகனநெருக்கடி மற்றும்  வாகனத்தரிப்பிடம் என்பவற்றிக்கு புதிய அணுகுமுறைகளை அறிமுகம் செய்தல்.


நகர வடிவமைப்பின் 5 மூலங்கள்.

1. கட்டடங்கள்
கட்டடங்கள் நகர வடிவமைப்பில் முக்கியமான ஒன்றாகும். நகரத்தின் வீதிகளின் சுவர்களை உருவாக்குவதன்  ஊடாக வெளிகளை வரையறுத்து சிந்தனைகளையும், உணர்வுகளையும் தெளிவாகவும், இலகுவாகவும் வெளிப்படுத்துகின்றன. நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் குழுவாக்கப்பட்ட கட்டடங்கள் சேர்ந்து இயங்கி  உணர்வுள்ள இடங்களை உருவாக்க உதவுகின்றன.

2. பொது இடங்கள்
சிறந்த பொது இடங்கள் நகரத்தின் வாழும் இடங்கள் - மக்கள் ஒன்று கூடி நகரத்தையும், ஒருவரை ஒருவர்  அனுபவிக்கும் இடம். பொது இடங்கள் நகரங்களில் உயர்ந்த வாழ்க்கையை அமைக்க சாத்தியபப்படுகின்றது. வாழ்க்கையின் நாடகத்திற்கு களம் அமைத்து பின்னணியை உருவாக்குகின்றது. பெரிய கடைத்தொகுதிகள் மற்றும்  முற்றங்களில் இருந்து சிறிய உள்ளுர் பூங்கா வரை இதில் அடங்கும்.

3. வீதிகள்
வீதிகள் வெளிகளையும் இடங்களையும் இணைக்கின்றது அதேவேளை அவைகளும் வெளிகளாக  இருக்கின்றன. இவை தங்களது பௌதீக நீள அகலம் மற்றும் அளவு, பரிமாணம் மற்றும் அவற்றை வரிசைப்படுத்தும்  கட்டடங்களின் தன்மை ஆகியவற்றால் வரையறுக்கப்படுகின்றன. இவை பெரிய வீதிகளில் இருந்து சிறிய தனிப்பட்ட  நடைபாதைகள் வரை அடங்கும். வீதிகளின் கோலங்கள் நகரங்களைத் தீர்மானிக்கின்றன மேலும் இவையே  ஒவ்வொரு நகரத்தையும் தனித்துவமாக்கின்றன.

4. போக்குவரத்து
போக்குவரத்து முறைகள் நகரத்தின் பகுதிகளை இணைத்து நகரத்திற்கு வடிவத்தை ஏற்படுத்த உதவுகின்றன  மேலும் நகரத்தினுள் நகருவதற்கு உதவுகின்றன. இவற்றுள் வீதி, புகையிரதம், துவிச்சக்கர வண்டி மற்றும்  நடைபாதைகள் இவை எல்லாம் இணைந்து நகரத்தின் ஒட்டுமொத்த நகர்வு முறையை உருவாக்குகின்றன. பல்வேறு  வகையான போக்குவரத்து முறைகளுக்கு இடையிலான சமநிலையானது நகரத்தின் தன்மை மற்றும் சாயலை உருவாக்க உதவுகின்றன மேலும் இவை பாதசாரிகளுக்கு நட்புறவான அல்லது எதிர்மறையான நிலையை  உருவாக்குகின்றன. சிறந்த நகரங்கள் பாதசாரிகளின் அனுபவத்தை அதிகரிக்க செய்யும் அதேவேளை  வாகனங்களின் மேலாதிக்கத்தை குறைக்கும்.

5. பெரிய கிராம நிலத்தோற்றம்.
இது நகரத்தைப் முழுவதுமாக இணைக்கும் பூங்காக்கள், வீதியோர மரங்கள், கன்றுகள், பூக்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற  பச்சைநிறப்பகுதியாகும். இது நகரத்தின் சாயலை வரையறுக்கும், அழகூட்டுவதற்கும் மேலும் நகரத்தை மென்மையாக்குவதற்கும், வெளிகளையும், மூலங்களையும் ஒன்றில் இருந்து இன்னொன்றை பிரித்துக்காட்டும். நகரத்தின் பச்சைப்பகுதிகள் மைதானங்கள் பூங்காக்கள் மற்றும் சிறிய அன்யென்னியமான பூங்காக்கள் இதில் அடங்கும்.



Friday, December 16, 2016

தமிழர் - கலை - பண்பாடு

இந்த தலைப்பில் மூன்று விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. இவற்றில் எல்லா இனங்களுக்கும் உள்ள இரண்டு பொதுவான விடயங்களான கலை மற்றும் பண்பாடு ஆனது மூன்றாவது விடயமான தமிழர் என்ற இனம் என்பதோடு மட்டும் இணைத்துப் பார்க்கப்படுகின்றது. இங்கு சொல்லப்படுகின்ற மூன்று விடயங்களையும் தனித்தனியே பார்க்க வேண்டும். அதாவது தமிழர் -கலை-பண்பாடு என்பவற்றை தனித்தியான ஆராய்ந்தால் மடடுமே முழுவதையும் இணைத்துப்பார்க்க முடியும்.

முதலில் தமிழர் என்பதை எடுத்துக்கொண்டால் இங்கு எழும் முக்கிய பிரச்சனை தமிழர்களை எவ்வாறு வரையறுப்பது. தமிழ் மொழி பேசுபவர்கள் அனைவரும் தமிழர்களா? அல்லது எந்த மொழி பேசினாலும் அம்மக்களின் மரபணு பண்புகளில் இருந்து தமிழர்களை வரையறுப்பதா?
அல்லது வரலாற்று ரீதியாக தமிழர்களாக இருந்து பல்வேறு நாடுகளில் தமிழ் மொழி தெரியாது வாழும் தமிழ் வம்சாவளியில் வந்தவர்களை குறிப்பிடுவதா? மனிதர்கள் தோன்றிய காலம் முதல் தமிழ் என்ற மொழி பேசும் இனம் தோன்றியது என்று வைத்துக்கொண்டால் ஆதியில் பிறந்த தமிழர்கள் எல்லோரும் இன்று அப்படியோ இருக்கிறார்களாபூமியின் சுழற்சி அதனால் ஏற்பட்ட காலநிலை மாற்றம், இடப்பெயர்வு, அன்னியராட்சி போன்ற பல்வேறு காரணங்களால் இன்று குறித்த இனம் மடடுமல்ல அநேகமான மனித இனங்கள் எல்லாம் இந்த உலகம் மட்டுமல்ல பிரபஞ்சம் முழுவதுமே இருப்பார்கள் என்பதை சாதாரண அறிவு படைத்த எவருமே ஏற்றுக்கொள்வார்கள். அப்படியாயின் தமிழர்கள்  என்று யாரைக்குறிப்பது?
தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களின் மூதாதையர்கள் ஆபிரிக்ககண்டத்தில்  இருந்து வந்தவர்கள் என்று அண்மைக்கால மரபணுப் பரிசோதனைகள் சொல்வதாக கூறப்படுகின்றது. இதே வேளை இலங்கையில் பல்வேறு அரசியல் இராணுவத் தேவைகளுக்காக பல்வேறு இன மொழி பேசியவர்கள் தமிழ் மொழியைப் பேசி, தமிழ் பேசியவர்களை திருமணம் செய்தும், தமிழர் பண்பாடுகள் என்று கூறப்படுபவைகளைப் பின்பற்றியும் வாழ்கின்றமையை அவதானிக்கலாம். இவ்வாறான போக்கு கடந்த 500 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இன்று யார் தமிழர்கள் என்பது வரையறுக்க முடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் கலை என்பதை எடுத்துக்கொண்டால்,
கலைகளின் தோற்றத்தைப் பார்க்கும் போது வேட்டையாடிய மனிதன் தன்னுடைய வேட்டை அனுபவத்தை ஏனையவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதற்காக சித்திரங்களை வரைந்ததாகவும், ஓய்வு சேரங்களில் ஆடல் பாடல்களில் ஈடுபட்டதாகவும் வரலாறு சொல்கின்றது. அந்த மனித இனம் தமிழ் பேசியதாக வைத்துக்கொண்டால்இன்று தமிழ் பேசும் அல்லது தமிழர் என்று சொல்லப்படும் ஒருவர் ஏற்பட்ட கால மாற்றத்தால் ஒவியத்துறையில் அல்லது ஏனைய கலைத்துறையில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களை, சிந்தனைகளை உள்வாங்கி தன்னுடைய படைப்புக்களை உருவாக்குவதை தமிழ்நாட்டிலேயே காணக்கூடியதாக உள்ளது. இதற்கு மேலாக இன்று ஐரோப்பிய சூழலில் வாழும் தமிழ் பேசும் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய படைப்புக்களை ஒரு கலைப்படைப்பு என்ற அடைப்படையிலேயே நோக்கின்றார். ஆதனை எந்தச் சந்தர்பத்திலும் தமிழ் அல்லது தமிழருடைய படைப்பு  என்று பார்ப்பதில்லை. இன்று உலகில் ஏற்பட்டிருக்கும் சிந்தனை மாற்றம் அநேகமாக எல்லாவிதமான கலைப்படைப்புகளையும் கலை என்ற கோணத்தில் மட்டும் பார்க்கும் போக்கு காணப்படுகின்றது. உலகம் தகவல் தொழில்நுட்ப புரட்சியை உள்வாங்கிய பின்னர் மனித மனங்களில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம் சில மனிதக்குழுக்களுக்குரிய கலைகளை பாரம்பரிய அல்லது நாட்டுப்புற கலைவடிவம் என்ற வகையில் வகைப்படுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தமிழர்களின் கலை என்று கூறி நாம் பாதுகாக்கும் ஒன்றை தொடர்ந்து பேணிப்பாதுகாப்பது ஒரு கலைஞனின் ஆற்றலை அல்லது வளர்ச்சியைமட்டுப்படுத்துவது போன்ற செயற்பாடு என்ற எண்ணமே தோன்றுகின்றது.

அடுத்த விடயம் பண்பாடு
ஒரு விலங்கின் நடத்தை என்பது குறித்த விலங்கு வாழும் சூழ்நிலை, அந்த சூழலின் தரைத்தோற்றம், காலநிலை என்பவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது. உதாரணமாக இந்தியா இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் நிலவும் காலநிலைக்கு குறித்த மக்களின் உணவுப்பழக்கம் மற்றும் ஆடை அலங்காரங்கள் தோன்றின, அவை தொடர்நதும் பின்பற்றப்பட்டன. காலப்போக்கில் உலக வர்த்தகம் விரிவடைய பிறநாடுகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்கள் மக்களின் உணவுப்பழக்கம், ஆடை அலங்காரங்களில் மாற்றத்தை ஏற்படுத்தின. இக்காலப்பகுதியில் மக்களின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மக்களின் நீண்ட காலப்பழக்க வழங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தின. இவ்வாறான மாற்றங்கள் தமிழர் என்று  சொல்லப்படும் மக்களின் வாழ்வில் கடந்த 200 வருடங்களில் பாரிய மாற்றம் ஏற்பட்டன. பாரிய அளவில் ஏற்படுத்தப்பட்ட கட்டாயக்குடிஏற்றங்கள், பாதுகாப்பிற்கான இடப்பெயர்வுகள், தொழில் ரீதியான இடப்பெயர்வுகள் எல்லாம் மக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி தொடர்ச்சியாக பண்பாட்டில் மாற்ங்களை ஏற்படுத்தின. முன்னைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட தமிழ் மக்களின் பண்பாடு என்பது இன்றைய தமிழ் மக்களின் பண்பாடு எனப்படுவதோடு பாரிய வேறுபாடுகளை காட்டிநிற்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் எழுகின்ற முக்கிய கேள்வி என்னவெனில்  இன்றைய தொழில்நுட்பம், தொடர்பாடல்கள் இல்லாத ஒரு காலகட்டத்தில் அதாவது இன்றைய காலத்திற்கு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் தோன்றிய ஒரு வாழ்க்கை முறையை ஒரு இனத்தின் அடையாளம் அல்லது பாரம்பரியம் என்ற பெயரில் அதனைப்பாதுகாக்க வேண்டுமா? இன்றைக்கு 10 வருடங்களிற்கு முன்னர் வந்த சாதாரண கைத்தொலைபேசியை எந்த மனித இனத்தைச் சேர்ந்த ஒருவருமே உபயோகப்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுவது கிடையாது. ஏனெனில் அவ்வாறான கைத்தொலைபேசிகள் இன்று பயன்பாட்டிற்கு தேவையான வசதிகளை கொண்டிருக்கவில்லை என்பதே காரணம்.

இனி தமிழர் கலை பண்பாடு என்ற விடயத்தை முழுமையாக நோக்கினால் தமிழ் பேசுக்கின்ற ஒரு மக்கள் கூட்டம் தங்களுடைய கலை பண்பாடு என்று உறுதியாக வரையறுக்க முடியாத சில வரையறைகளுக்குள் மட்டும் தங்களை மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி எழுகின்றது. இன்று எம்மத்தயில் காணப்படுகின்ற சட்டங்கள் சாதாரண மக்களுக்கு மட்டும் பிரயோகிக்கப்படுகின்ற அதேவேளை குறித்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டியவர்கள் குறித்த சட்டங்களை மீறி செயலாற்றுவது போல் தமிழ் பேசும் மக்களில்ஒரு சிலர் மட்டும் நிகழும் சமூக மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தாங்கள் சிறுவயதில் இருந்து புகுத்தப்பட்ட சில கலை பண்பாடு அதனைக் காப்பாற்றவும், பேணிப்பாதுகாக்கவும் முற்பட்டு அதனை முழுமையாக செய்யாது மனதளவில் துன்பத்திற்கு உள்ளாவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.


தமிழர்கள் எனச்சொல்லப்பபடும் மக்கள் கூட்டம் உலகில் மாற்றங்கள் ஏற்படுவதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து ஏனைய தங்களை இந்த பூமியில் தக்க வைக்கவேண்டும் அதற்கான செயற்பாடுகள் அவசியம். துமிழர் கலை உயர்ந்தது, பண்பாடு சிறந்தது என நம்புவர்கள் அதனைப் பின்பற்றி வாழ்ந்து உயர்ந்து காட்டவேண்டும். இது இவ்வாறு இருக்க யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே சிவம் போன்ற தமிழ்ச் சொற்கள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.