Thursday, December 29, 2016

நகர வடிவமைப்பு

நகர வடிவமைப்பு என்றால் என்ன? 


பல்வேறுவகையான விளக்கங்கள் அல்லது வரையறைகள் இருக்கின்றன. இருப்பினும்  நகரத்தை, அல்லது பட்டினத்தை அல்லது கிராமத்தை வடிவமைக்கும் அல்லது சீராக்கும் செயல்முறை என்று கூறலாம். கட்டடக்கலை ஒரு இடத்தில் உள்ள கட்டடத்தை பற்றி கவனம் செலுத்தும் வேளையில் நகர வடிவமைப்பு கட்டங்களின் தொகுதி, வீதிகள், ஒரு பகுதியில் உள்ள கட்டடங்களின் கூட்டம், பூங்காக்கள், மக்கள் கூடும் திறந்த வெளிகள், முழுநகரம் எல்லாவற்றையும் இணைத்து நிலைத்து நின்று கவர்ச்சியாக பொருத்தமான வகையில் இயங்குதிறனுள்ளதாக எவ்வாறு ஒருங்கிணைத்து திறம்பட இயங்க வைக்கலாம்  என்பதை செய்வதாகும். இதற்கு கட்டடக்கலை மற்றும் சமூக இயக்கம் பற்றிய அறிவு அத்தியாவசியமாகும். 

நகர வடிவமைப்பிற்கான எல்லைகள்

பின்வரும் 6 விடயங்கள் நகர வடிவமைப்பை வரையறுக்கின்றன
1. வரலாற்றைப் பேணி நகரத்தைப் (தாவரங்கள், உயிரினங்கள் இயற்கையான இடம், முக்கியமான மற்றும் இரசிக்ககூடிய பழைய கட்டடங்கள்.....)குறிப்பாக மக்களின் நடவடிக்கையில் இருந்து பாதுகாத்தல்.
2. பாதசாரிகளுக்காக வடிவமைத்தல்
3. சக்தியையும் பலத்தையும் தரக்கூடிய பல்வேறு வகையான பாவனை
4. கலாசாரச் சூழல்
5. சூழலின் அமைவிடம்
6. கட்டடக்கலை வடிவமைப்பிற்கான பின்னணி

நகர வடிவமைப்பினை விபரிப்பதற்கு பின்வரும் 8 தன்மைகள், இலக்குகள் மற்றும் பிரதான தத்துவங்களை  குறிப்பிடமுடியும்

1. இடம்
2.அடர்த்தி
3.பல்வேறு வகையான பொருத்தமான பாவனை
4.வாகனங்கள் அனுமதிக்கப்படாத இடங்களும் மனிதர்களுடைய பிரமாணங்களும்
5. மனித கலாசாரம்
6. பொது மக்களின்பாவனைக்கான வீதிகள், நடை பாதகைகள், பூங்காகக்கள், திறந்தவெளிகள், பொதுமக்கள்  கட்டடங்கள் மற்றும் சேவைகள்
7.கட்டடச்சூழல்
8. இயற்கைச்சூழல்

நகர வடிவமைப்பின் 7 பிரதான அம்சங்கள்

1.மக்களுக்கான இடங்கள்
இடமானது நன்றாக விரும்பக்கூடிய நல்ல பாவனைக்காக இருக்க வேண்டும். இவை பாதுகாப்பான, வசதியான பல்வேறுவகையான மற்றும் கவர்ச்சியானதாக இருக்கவேண்டும். அவை ஏனைய இடங்களில் இருந்து வேறுபட்டதாகவும்  மக்களுக்கு பல்வேறு களிப்புகளை வழங்கக்கூடியதாகவும், மக்கள் சந்திப்பதற்கு சந்தர்பங்களை வழங்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். வீதிகளில் இருந்து விளையாட உலகம் நகருவதை  இரசிக்ககூடியதாக இருக்கவேண்டும்.

2. ஏற்கானவே இருப்பதை மெருகூட்ட வேண்டும்
புதிய அபிவிருத்திகள் ஏற்கனவே உள்ள இடங்களை மெருகூட்ட வேண்டும். அதாவது அமைவிடத்தில் இயல்பாக வரக்கூடிய புதிதாக வெளிவரும் ஏனைய இடங்களிலும் பார்க்க வேறுபட்ட செயற்பாடுகளை  ஊக்கப்படுத்தவேண்டும். இது பிராந்தியம், நகரம், பட்டினம், அயல் மற்றும் வீதிகள் போன்ற எல்லா மட்டங்களிலும்  பிரயோகிக்கப்படும்.

3. தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்
இடங்கள் இலகுவில் அடையக்கூடியதாகவும், பௌதீக ரீதியாகவும், பார்வை ரீதியாகவும் சுற்றுப்புறத்துடன் இணைய  வேண்டும்.  குறித்த இடத்திற்கு எவ்வாறு கால்நடையாக, துவிச்சக்கர வண்டியில், பொது போக்குவரத்தில், மற்றும் பிரத்தியோகமாக சேர முடியும் என்பதில்  கவனம் கொள்ள வேண்டும்.

4. நில வடிவமைப்புடன் வேலை செய்தல்
இடங்களானது மனித உருவாக்கங்களுக்கும் இயற்கைக்கும் இடையில் சமநிலை பேணி, இந்த இடங்களில் உள்ள  காலநிலை, நிலவமைப்பு, நிலதோற்றம் மற்றும் இயற்கைக்கு டையிலான தொடர்புகளைப் பயன்படுத்தி சக்தி  பேணுதலையும், மக்கள் அதிகம்பயன்படுத்தும் வகையிலும் உபயோகிக்க வேண்டும்.

5. பல்வேறு பாவனையும், வடிவங்களும்
புதிய தூண்டல்களை ஏற்படுத்த கூடிய இரசிக்க கூடியவசதியான இடங்கள் பல்வேறு  மனிதக்குழுக்களுக்களாலும் ஏற்படுத்தப்படும் தேவைகளை நிறைவேற்றும். அவை மேலும் பல்வேறு கட்டட  வடிவங்கள், பாவனைகள், உரிமங்கள் மற்றும் மக்களின் அடர்த்தி என்பவற்றால் பின்னப்பட்டிருக்கும்.

6. முதலீட்டினை முகாமைத்துவம் செய்தல்
திட்டங்கள் விருத்தி செய்யக்கூடியதாக மற்றும் நன்கு கவனிக்க கூடியதாக இருப்பதற்கு அவை பொருளாதார  சாத்தியமுள்ளதாகவும், நன்கு முகாமைத்துவம் மற்றும் பராமரிக்க கூடியதாகவும் இருக்கவேண்டும். அதாவது வடிவமைப்பின் ஒரு பகுதியாக  அபிவிருத்தியாளர்களின் சந்தையை கருத்தில் எடுத்தல், சமூக மற்றும் உள்ளுர்  அதிகாரசபையின் நீண்டகால ஈடுபாடு, பொருத்தமான வழங்கல் பொறிமுறையை தீர்மானித்தல்.

7. மாற்றத்திற்கான வடிவமைப்பு
புதிய அபிவிருத்திகள் எதிர்கால பாவனையில், வாழ்க்கை முறை மற்றும்  குடித்தொகையில் ஏற்படும் மாற்றங்கள்  போன்றவற்றை எதிர்கொள்வதற்கு நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அதாவது சக்தி மற்றும் வள உச்சப்பயன்பாட்டிற்கு வடிவமைத்தல், சொத்துக்கள், பொது இடங்கள், பொதுச்சேவைகள் என்பவற்றின்  பயன்பாட்டில் நெகிழ்வுத்தன்மைகளை அறிமுகம் செய்தல், போக்குவரத்து, வாகனநெருக்கடி மற்றும்  வாகனத்தரிப்பிடம் என்பவற்றிக்கு புதிய அணுகுமுறைகளை அறிமுகம் செய்தல்.


நகர வடிவமைப்பின் 5 மூலங்கள்.

1. கட்டடங்கள்
கட்டடங்கள் நகர வடிவமைப்பில் முக்கியமான ஒன்றாகும். நகரத்தின் வீதிகளின் சுவர்களை உருவாக்குவதன்  ஊடாக வெளிகளை வரையறுத்து சிந்தனைகளையும், உணர்வுகளையும் தெளிவாகவும், இலகுவாகவும் வெளிப்படுத்துகின்றன. நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் குழுவாக்கப்பட்ட கட்டடங்கள் சேர்ந்து இயங்கி  உணர்வுள்ள இடங்களை உருவாக்க உதவுகின்றன.

2. பொது இடங்கள்
சிறந்த பொது இடங்கள் நகரத்தின் வாழும் இடங்கள் - மக்கள் ஒன்று கூடி நகரத்தையும், ஒருவரை ஒருவர்  அனுபவிக்கும் இடம். பொது இடங்கள் நகரங்களில் உயர்ந்த வாழ்க்கையை அமைக்க சாத்தியபப்படுகின்றது. வாழ்க்கையின் நாடகத்திற்கு களம் அமைத்து பின்னணியை உருவாக்குகின்றது. பெரிய கடைத்தொகுதிகள் மற்றும்  முற்றங்களில் இருந்து சிறிய உள்ளுர் பூங்கா வரை இதில் அடங்கும்.

3. வீதிகள்
வீதிகள் வெளிகளையும் இடங்களையும் இணைக்கின்றது அதேவேளை அவைகளும் வெளிகளாக  இருக்கின்றன. இவை தங்களது பௌதீக நீள அகலம் மற்றும் அளவு, பரிமாணம் மற்றும் அவற்றை வரிசைப்படுத்தும்  கட்டடங்களின் தன்மை ஆகியவற்றால் வரையறுக்கப்படுகின்றன. இவை பெரிய வீதிகளில் இருந்து சிறிய தனிப்பட்ட  நடைபாதைகள் வரை அடங்கும். வீதிகளின் கோலங்கள் நகரங்களைத் தீர்மானிக்கின்றன மேலும் இவையே  ஒவ்வொரு நகரத்தையும் தனித்துவமாக்கின்றன.

4. போக்குவரத்து
போக்குவரத்து முறைகள் நகரத்தின் பகுதிகளை இணைத்து நகரத்திற்கு வடிவத்தை ஏற்படுத்த உதவுகின்றன  மேலும் நகரத்தினுள் நகருவதற்கு உதவுகின்றன. இவற்றுள் வீதி, புகையிரதம், துவிச்சக்கர வண்டி மற்றும்  நடைபாதைகள் இவை எல்லாம் இணைந்து நகரத்தின் ஒட்டுமொத்த நகர்வு முறையை உருவாக்குகின்றன. பல்வேறு  வகையான போக்குவரத்து முறைகளுக்கு இடையிலான சமநிலையானது நகரத்தின் தன்மை மற்றும் சாயலை உருவாக்க உதவுகின்றன மேலும் இவை பாதசாரிகளுக்கு நட்புறவான அல்லது எதிர்மறையான நிலையை  உருவாக்குகின்றன. சிறந்த நகரங்கள் பாதசாரிகளின் அனுபவத்தை அதிகரிக்க செய்யும் அதேவேளை  வாகனங்களின் மேலாதிக்கத்தை குறைக்கும்.

5. பெரிய கிராம நிலத்தோற்றம்.
இது நகரத்தைப் முழுவதுமாக இணைக்கும் பூங்காக்கள், வீதியோர மரங்கள், கன்றுகள், பூக்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற  பச்சைநிறப்பகுதியாகும். இது நகரத்தின் சாயலை வரையறுக்கும், அழகூட்டுவதற்கும் மேலும் நகரத்தை மென்மையாக்குவதற்கும், வெளிகளையும், மூலங்களையும் ஒன்றில் இருந்து இன்னொன்றை பிரித்துக்காட்டும். நகரத்தின் பச்சைப்பகுதிகள் மைதானங்கள் பூங்காக்கள் மற்றும் சிறிய அன்யென்னியமான பூங்காக்கள் இதில் அடங்கும்.



No comments:

Post a Comment