Tuesday, September 19, 2017

நிலையான சமாதானத்திற்காக ஆனையிறவில் ஒரு நினைவாலையம்

இலங்கையில் நிலவிய ஆயுதப்;போராட்டமானது 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கபட்ட பின்னர் முடிவுக்கு வந்தது. அதற்கு பின்னர் இலங்கை இராணுவத்தினரும், மக்களில் ஒரு பகுதியினரும்  பாற்சோறு பரிமாறுதல், நினைவு இடங்கள் அமைத்தல், வருடாந்த நிகழ்வுகள் செய்தல், அனுபவப்பகிர்வு செய்தல் எனப்பல்வேறு வகையில் போர் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இன்றும் மகிழ்கின்றனர். இக்கொண்டாட்டமானது தோற்றுப்போனதாக கருதப்பட்ட பெரும்பாலான தமிழ் மக்களை மனதளவில் பாதித்தது. அதனை தமிழர்களும் இன நல்லினக்கத்தில் அக்கறையுள்ள வேறு பலரும் சுட்டிக்காட்டி வந்தனர் இன்றும் வருகின்றனர்.

தொடர்ந்து வந்த அரசியல் மாற்றங்கள் காரணமாக இலங்கையின் அரசாட்சியானது மாற்றங்கண்டது. குறித்த அரசானது நாட்டில் மக்களுக்கிடையில் நல்லிணக்கம் நிலவவேண்டும் என்ற அக்கறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனூடாக மக்களில் ஒரு பகுதியினரைத் திருப்திப்படுத்தியும் அதே வேளை இன்னொருபகுதியினரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டது. 

நிலைமை இவ்வாறு இருக்க, நிரந்தரமாக கட்டப்பட்ட பல நினைவுத்தூபிகள் தொடர்ந்தும் நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கின்றன. இவற்றில் வடக்கு கிழக்கில் இருக்கும் நினைவுத்தூபிகள் தோற்கடிக்கப்பட்டதாகக் கருதப்படும் தமிழர் பகுதியில் இருப்பதும், அவற்றைப் பார்பதற்காகவும், குறித்த போரில் உயிர் நீத்த படையினரின் உறவினர்கள் அவர்களை நினைவு கூர்வதற்காகவும் வந்து செல்வதும் தொடர்நது இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது. இதேவேளை போரில் உயிர்நீத்த புலிப்;போராளிகளை நினைவு கூர்வதற்கு தடைவித்த படையினர் அரசியல் மாற்றம் அடைந்ததும் நினைவு கூறுவதற்கு அனுமதித்து இருந்தனர். தொடர்ச்சியாக முன்பு அழிக்கப்பட்ட புலிகளின் மாவீரர் மயானங்கள் மீளக்கட்டப்பட வேண்டும் என்ற கோசங்களும், அதற்கான முயற்சிகளும் இடம்பெற்றன.

மேற்குறித்த இரண்டு தரப்பினரது போரில் ஈடுபட்ட தரப்பினரையும் அதனோடு சேர்ந்த நிகழ்வுகளையும் நினைவு கூரும் முறையானது இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிக்கத்திற்குப் பதிலாக வேறு ஒன்றையே ஏற்படுத்துகின்றது அல்லது ஏற்படுத்தும்.

மேற்கூறப்பட்ட அனைத்தும் தற்போதைய நிலை. இந்த இடத்தில் 2002 ஆம் ஆண்டு மாசி மாதம் ஏற்பட்ட சமாதான காலத்தில் கட்டடக்கலை பயின்றவன் என்ற ரீதியில் நான் எடுத்துக்கொண்ட முயற்சியினை இங்கே கூறுவது நல்லிணக்கத்தில் அக்கறையுள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன்.
தமிழீழ விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்கள் மாவீரர்களுக்கு நினைவுத்தூபிகள் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்களுடனும் கதைத்துப்பேசி தங்களுடைய எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க முற்பட்டனர். அத்துடன் இவ்வாறான வேலைத்திட்டங்களுடாக போராட்டத்துடன் விலகி நின்ற தமிழர்களை உள்வாங்கிக்கொண்டிருந்தனர். அந்த வகையில் நானும் கிளிநொச்சியில் ஊடகத்துறையுடன் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக சென்று கொண்டிருந்தேன். என்னுடைய கல்விப்புலத்தை அறிந்த சிலர் மாவீரர் நினைவுத்தூபி அமைப்பது தொடர்பில் கதைத்தனர். அதற்கு என்னால் முன்மொழியப்பட்ட திட்டம்.

முழுப்போராட்டத்திற்குமான நினைவுத்தூபி ஒன்று அமைக்கலாம் அதுவும் ஆனையிறவில் அமைப்பதே சிறந்தது.

1. இலங்கiயின் தரைத்தோற்ற அமைப்பில் ஆனையிறவு கழுத்துப்பகுதி ஆகும். கழுத்தில் ஆபரணங்கள் அணிவது மனிதப்பண்பு. உடலின் இருவேறு வடிவமைப்பில் உள்ள பகுதிகளை கழுத்தே இணைக்கின்றது.

2. ஆனையிறவில் இடம்பெற்ற யுத்தம் பலரின் உயிரை காவு கொண்டது. (விடுதலைப்புலிகள், இராணுவம், பொது மக்கள்)
3. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவுத் தாக்குதலே சமாதான முயற்சிகளுக்கு வித்திட்டது.

4. குறித்த இடம் முற்று முழுதாக பொதுக்காணி (அரச) 

5. வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதிலும் பார்க்க பொது இடம் ஒன்றை அமைப்பதற்கு பொருத்தமான இடம். குறித்த இடத்தை கடந்தே தலைப்பகுதியான குடா நாட்டிற்கு ஒள்ளேயும், வெளியேயும் செல்ல முடியும் (பூநகரி பாலம் அமைப்பதற்கு முன்னர்)

6. இன்றைய திகதியில் ஏற்கனவே இராணுவத்தினர் தங்களுடைய நினைவுத்தூபியையும் போர் வெற்றிச்சின்னத்தையும் அமைத்து காட்சிப்படுத்தி வருகின்றனர். குறித்த இடத்தில் ஏனைய மக்களையும் நினைவு கூருவதற்கு இடம் அமைத்து குறித்த ஆனையிறவுப்பகுதியை நினைவாலயம் அமைக்கப்பயன்படுத்துவதே சிறந்தது.


நினைவுத்தூபியின் அமைப்பு



கொங்கிறீட்டில் உயரமாக அமைக்கப்படும் கூம்பு போன்ற (இணைக்கப்பட்டிருக்கும் படத்தை பார்க்கவும்.) படத்தில் காட்டியவாறான அமைப்பு.

அதில் உச்சியில் ஒரு திறந்த மற்றும் கண்ணாடியால் மூடப்பட்ட ஒரு துவாரம்.
அமைப்பில் மேற்புறத்தில்  படத்தில் காட்டிவாறான துளை.

நீண்ட தூர நடைக்குப்பின்னர் அமைப்பிற்குள் உள்ளே செல்வதற்கான வாயில்
உள்ளே சுற்றி வர நடந்து செல்வதற்கு ஏற்ற வட்டப்பாதை அதன் நிலம் மண்ணால் நிரப்பப்பட்டது.

உள்ளே நடுவில் தொக்கிய நிலையில் அணையா விளக்கு
குறித்த அமைப்பு கடலின் மேல் கட்டப்படுவதால் கடல் நீர் உள்ளே சென்றுவருவதற்கான ஏற்பாடு

நீண்ட நடை பாதையின் இரு மருங்கிலும் போரில் இறந்து போன பொதுமக்கள், போராளிகள் (அனைத்துப் போராட்டக்குழுக்களும்) படையினர், ஆகியோரை நினைவு கூருவதற்கு ஏற்ற வகையிலான  ஏற்பாடுகள்

போர் சம்பந்தமான வரலாறுகளைச் சொல்லக்கூடிய கண்காட்சிக்கூடம். இளைப்பாறும் இடங்கள் மற்றும் இதர வசதிகளுக்கு தேவையான அமைப்புக்கள். என்பன இடம் பெற வேண்டும் என்று எனது எண்ணத்தை தெரிவித்திருந்தேன்.

கட்டட அமைப்பின் கரு

உலகில் மனித வாழ்வு என்பது இயற்கையால் உருவாக்கப்படும் உடல் சம்பந்தப்பட்டது. உடலில் ஆன்மா இருக்கும் வரை அது தன்னுடைய செயல்களைச் செய்யும் உடலில் இருந்து ஆன்மா பிரிந்ததும் உடல் மீண்டும் பஞ்ச பூதங்களோடு கலந்து விடும். மனிதர்கள் இயற்கையை உணராத பட்சத்திலேயே மனிதர்கள் மனிதர்களுக்கு எதிராக அணிதிரள்கின்றனர். நாட்டு மக்கள் அனைவரும் இயற்கையை உணர வேண்டும். இயற்கையை உணர்ந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தியும், நெருக்கமாகவும் வாழ்வார்கள்.

போரில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒரு இடத்தில் நினைவு கூரும் போது நாடடு மக்கள் எல்லோருக்கும் பொதுவான இடம் ஒன்று இயல்பாகவே உருவாக்கப்படும். 

குறித்த திட்டம் தொடர்பில் என்னுடைய நண்பர்கள் பலருடனும் கதைத்து இருந்தேன். குறித்த விடயத்தை இன்று வெளியிடுவதன் நோக்கம் என்னுடைய நாட்டில் இன்னொரு யுத்தம் ஒன்று ஏற்பட்டு அப்பாவி பொதுமக்கள் இன்னல்களை அனுபவிக்க கூடாது என்ற நோக்கமே. ஒருவரோடு இன்னொருவர் முரண்பட்டுக் கொள்வதற்கும், வெறுப்பதற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். அவர்களுடைய உணர்வுகளை சிலர் தங்களுடைய நலனுக்குப் பயன்படுத்தும் வேளையில் அவர்களுக்கு இடையில் சண்டைகளை ஏற்படுத்தி விடுவார்கள். கோபத்தில் இருப்பவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையில் ஈடுபட்டு அழிந்து போக ஏனையவர்கள் அழிவுகளால் இலாபங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள் (ஆயுத வியாபாரிகளும் அதனோடு சார்ந்தவர்களும்)
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு இடம் அமைக்க அனுராதபுரத்தை அரசு தெரிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிரந்த சமாதானத்தை விரும்பும் அனைவருக்கும் இந்தக்கட்டுரை சமர்ப்பணம். நெல் விதைத்தால் நெல் அறுபடை செய்யலாம் இது தான் யதார்த்தம்.


குமாரலிங்கம் பதீதரன்
கட்டடக்கலைஞர்

pathytharan@gmail.com 

Wednesday, August 2, 2017

சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 21வது நினைவுப் பேருரை - கட்டடக்கலைஞர் சி.அஞ்சலேந்திரன்

சுவாமி விபுலானந்தர் இலக்கிய விமர்சகர், பேராசிரியர், கவிஞர், ஆசிரியர், துறவி என்பவைகளுக்கும் அப்பால் அவர் கிழக்கிலங்கையில் இந்து மறுமலர்ச்சியை 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 1948 வரை முன்னெடுத்தார் என கட்டடக் கலைஞர் சி.அஞ்சலேந்திரன் தெரிவித்தார்.



சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 125 வது நினைவு தினவிழா மற்றும் 21வது நினைவுப் பேருரை புதன்கிழமை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அவர் ஆற்றிய நினைவுப் பேருரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நினைவுப் பேருரை - எனது பணிகள் சுவாமியின் சமூக மறுமலர்ச்சிப் பணிகளோடு  ஒத்துப்போகிறது. ஏனென்றால் பொதுவாகக் கருதப்படுவதுபோல் செல்வந்தர்களின் அதிகார எல்லைக்குள் முடக்கியிருந்த கட்டடக்கலையை மீட்டு சாதாரண மக்களுக்கு, குறிப்பாக  ஏழைகளுக்கும் பயன்தரவல்லதாக மாற்ற முயல்கின்றேன்.

அண்மையில் ஐரோப்பாவில் ஆறுவார விடுமுறை காலத்தில், நெதர்லாந்தில் நீண்ட புகையிரதப் பிரயாணத்தின்போது பாட்குலாம் ஆலிகான் பாடிய ராக்ஹமிர் என்னும் கீதத்தைக் (கர்நாடாக இசையில் அது ஹமிர்கல்யாணி என அறியப்படுகின்றது) கேட்டேன். அது எனது ஐ-பாட்டில் உள்ள எம். எஸ். சுப்புலட்சுமி முதல் ஏ. ஆர். ரஹ்மான் வரை பாடிய, எனக்கு மிக விருப்பமான ராக்யாமன் கல்யாணியின் வேறுபட்ட வடிவங்களாகும். எல்லா அழகுகளையும் கண்டு கொண்டிருந்த போதும் குறித்த ஒன்றிலிருந்துதான் உயிர்த்தெழ முடியும். ஒருவன் தான் எவ்விடத்திற்கு உரியவன் என்பதையும் தன்னைத்தான் அறிந்து கொள்வதையும் நல்ல தொடக்கமாக கொள்ள முடியும்.

எனது கலைக்கூட செயற்பாடு

இன்று மூன்று தொடக்கம் நான்கு உதவியாளர்களுடன் இயங்கும் ஒரு கலைக்கூடமாக உள்ளது. 26 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடக்கலை செயற்பாடுகளை எனது தாயின் வீட்டு விறாந்தையில் இருந்து மேற்கொண்டேன். எனது அலுவலகம் ஒவ்வொரு நாளும் சுருட்டிக் கொண்டு போகக் கூடியதாக இருந்தது.
இப்போது அது எனது சொந்த வீட்டு விறாந்தையிலிருந்து இயங்குகின்றது. எனது போக்குவரத்து ஒரு முச்சக்கரவண்டியில் நடக்கிறது. லண்டனில் எனது பட்டப்பின்படிப்பை முடித்துக் கொண்டு 40 வருடங்களுக்கு முன்னர் நாடுதிரும்பினேன். அப்படிப்பு  எனக்கு வாழ்க்கை பற்றிய பொது மதிப்பைத் தந்தது. இருந்தபோதிலும் நான் நடைமுறை கட்டடக்கலையை இலங்கையின் தலைசிறந்த கட்டக்கலை விற்பன்னரான யோஃபெரிபாவாவிடம் இருந்து பயின்று கொண்டேன். குரு – சிஷ்ய முறையில் வாரத்திற்கு நாற்பது மணித்தியாலயம் என்ற அளவில் 10 ஆண்டுகள் அவரிடம் பயிற்சி பெற்றேன். இக்காலத்தில் நான் வேதனமெதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.

கட்டடக்கலையின் முதன்மையான கேள்வி

நான் நாட்டுக்கு வந்தவுடன் இலங்கை கட்டடக்கலை தொடர்ச்சியானதா, பாரம்பரியமானதா அமைவில் இது நவீன வாழ்க்கை முறைகளையும் விருப்பங்களையும் எற்கத் தயாரா உள்ளதா? என்ற கேள்வி என்னை எதிர்கொண்டது. எனக்கு விருப்பமான மத்திய கால, மிகுந்தலை தோட்டமான கலுடிய பொக்குன (கறுத்த நீர்தடாகம்) இயற்கையோடு இசைந்து வழமையான ஒழுங்கையும் வெளிகளையும் கொண்டிருக்கிறது. பாரம்பரியத்தின் இயக்கம் மற்றும் நவீனம் என்பவைகள் உயிர்த்துடிப்புடன் இயைந்து யோஃபெரிபாவாவின் பல்வகைப்பாணிகளில் இழையோடியுள்ளமையை காணலாம்.

இருந்த போதிலும் இந்த முக்கிய அம்சம், தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர், மலை நகரான கண்டி திரித்துவக் கல்லூரியின் துணை அதிபராக இருந்த கண்டோர் அவர்களால் 'சிங்களவர்களுக்கான ஆராதனை கூட்டம்' ஒன்றை கூட்டும்போது முன்னெடுக்கப்பட்டது. இந்துப்பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்குமான தொடர்பை நான் 40 களில் அன்ருபோயட், 50 களில் மினைற்றேசில்வா (யாரும் சிந்திக்காத காலத்தில் அவர் பிராந்திய நவீன கட்டடக்கலை பற்றி சிந்தித்தார்) 60 களின் உல்ரிக் பிளேஸ்னரின் மற்றும் யோஃபெரிபாவாவின் எழுத்துக்களிலும் பணிகளிலும் மேலும் அறிந்து கொண்டேன். உல்ரிக் பினேஸ்னருக்கு கட்டடக்கலையானது பயன்பாட்டுத்தன்மையும் 'ஆன்மாவுக்கான வீடாகவும்' உள்ளது.

60 களில் நடைமுறையில் இருந்த கடும் அரசியல் கொள்கை காரணமாக வெளிநாட்டுப் பொருள்களுக்கும் வெளிநாட்டுப் பிரயாணங்களுக்கும் தடைவிதித்தமையாளது உல்ரிக் பிளேஸ்னரினதும் யோஃபெரிபாவாவினதும் கட்டடக்கலையை செழிக்க வைத்தது. கட்டடக்கலையோடு ஒத்த துறைகளான பார்பராசன்சோனியின் வண்ணப்புடவை கைத்தறி நெசவுஇ மற்றம் எனடி சில்வாவின் உயிர்த்துடிப்புடைய பற்றிக்துணி உற்பத்தியையும் மற்றும் லக்கினேலூக்காவின் கட்டட நகலெடுப்பு கலைபோன்றவற்றையும் விளக்குவித்தது. அன்றுபோயட்டை தவிர எனது பெருமதிப்பு மேலே சொல்லப்பட்டவர்களுக்கு உரியதாகும். அவர்கள் இந்த அத்திவாரத்தில் நின்று அசாதாரணமான காரியங்களைப் புரிந்திருக்கிறார்கள்.

யோஃபெரிபாவாவின் கட்டடக்கலை

சமகால தென்னாசியாவின் தலைசிறந்த கட்டடக்கலை வல்லுநர்களில் ஒருவராக கருதப்படுவர். யோஃபெரிபாவா என்பது ஒருண்மையான கூற்றாகும்.  மேற்குலகின் கட்டடக்கலை ஒரு வெளித்தெரியும் பொருளாகும். ஆனால் பாவாவின் கட்டடக்கலை இத்தகையதல்ல. ஹவுஸ் ஒவ் த ரெட் கிளிவ் இல் மைல்கேல் ஒண்டாச்சி விபரித்துள்ளதின்படி 'அது வடிவமற்ற உலகின் வடிவமாகும்'. பாவா தனது பணியை பெந்தோட்டை லுணுகங்காவில் உள்ள தனது தோட்டத்தில் தோட்டக்கலைஞராகத் தொடங்கினார். தோட்டங்களையே கட்டட பொருளாக உபயோகித்து அவர் கட்டடங்களை வடிவமைத்தார் என்று கூட ஒருவர் சொல்லக்கூடும். ஆதனால் வெளி, வெளித்தோற்றம்;, எதிர்பாரா திருப்பங்கள் கொண்டதாக தோட்டங்களை ஆக்கினார். எளிமையாகச் சொன்னால் பாவாவுக்கு ஒரு கட்டடத்தை வடிவமைப்பதென்பது ஒரு தோட்டத்தை தோட்டத்துக்குள் உருவாக்குவதாகும். அந்தவகையில் பாபாவாவின் கட்டடக்கலை தனித்துவமானது.

கட்டடக்கலையில் என்ன முக்கியமானது

நாளாந்த வாழ்வின் முரண்பாடுகளைஇ பிரதானமாக குறை அபிவிருத்தி மற்றும் வன்செயல்களை வெளிக்காட்டும் மற்றக்கலைகளைப் போல் அல்லாமல், துரதிஷ்டமாக கட்டடக்கலை வாழ்க்கையை கொண்டாடுவதாக இருக்கின்றது. மிகவும் கடுமையான வெளித்தோற்றம் மாத்திரம் கொண்ட இன்ப உணர்வற்ற நிலப்பரப்பில் வரண்டு தெரியும் கட்டுமானங்களைக் கண்டு நான் மனவருத்தமடைகின்றேன். இந்தப் பொது நியதியை ஏற்றுக்கொண்டு ஒருவர்; உணர்வுéர்வமாக, திகைப்பில்லாமல், சிக்கனமாக நாளாந்த வாழ்வுக்குரிய கட்டடக்கலையை சன்னாடஸ்வத்த விபரித்துள்ளபடி தெரிவு செய்ய வேண்டும்.  அவர் கூறுகிறார் 'ஒவ்வொரு செயற்பாடும் அழகியல் அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்' அந்தவகையில் இலங்கை கட்டடக்கலைக்கு எனது பங்களிப்பு அது அழகியல் அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதை உயர்தொழில் புரியும் மத்தியதர வகுப்பு, தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மற்றும் அனாதை இல்லங்களை கட்டும் நிறுவனங்கள் மட்டத்தில் வலியுறுத்தியதாகும்.

நான் இங்கே படாடோபமில்லாத கவனத்தை ஈர்க்காத வட்டார பாணி கட்டடங்களைக் கண்டேன். அது பொதுமக்களிடையே அதிகம் புழக்கத்தில் இருந்ததாகும். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைவது சிறிய இளைப்பாறும் மண்டபங்கள் அல்லது குருநாகலில் கலகவெதரவில் உள்ளது போன்ற அம்பலங்களாகும். இந்த அம்பலம் நெல்வயல்களைப்  பார்த்தபடி அவைகளின் ஓரத்தில் தட்டையான பாறையில் நான்கு தூண்களை நிறுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இது பரிéரணமாக எனது கட்டடக்கலை எண்ணங்களைப் பிரதிபலிப்பதால் நான் அவைகளில் ஒரு நெருக்கத்ததை உணர்கிறேன்.
 இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆசியக்கலைகளின் முடிவான நோக்கம் கடவுளின் நிலையை அடைவதென்று மேற்கிற்கும் கிழக்கிற்கும் விளக்கினார். ஆனந்த குமாரசாமி துயரமும் துன்பமும் இடைக்கிடை கொண்டு வெளிப்புகளும் நிகழும். இலங்கைக்கு அது ஒரு தியான புகலிடத்தை வழங்கினாலே அது எனக்கு போதுமானது.


முடிவுரை

விரைவாக மாறிக்கொண்டிருக்கும் அலைபேசி மற்றும் இணயங்களின் காலத்தில் நிரந்தமான கட்டடக்கலை உள்ளதா என்ற கேள்வி என்னிடம் எழுப்பப்படுகின்றது. எனது பதில் தேடிக்கொண்டிரு, வர்த்தக நோக்கத்துக்காக தடம் மாறாதே (பிழையான சட்டங்கள் தான் முக்கிய காரணம்) எனது பிரதேசத்தின் வரலாற்றை அறிந்து, பெருமிதம் கொண்டு சாதனைபுரி என்பதாகும். 
http://thamildomain.com/article/433

Thursday, June 29, 2017

”அம்பலம்”

Image may contain: sky, tree, cloud, plant, outdoor and nature

”அம்பலம்” என்பது, பொது மக்கள் கூடும் திறந்த வெளி தங்குமிடம்; அல்லது மறைத்து வைக்கப்பட்டிருந்த இரகசியம் வெளியாதல் ஆகும்.
முற்காலத்தில் கால் நடையாகவும், வண்டிகளிலும் நீண்ட பயணம் செய்பவர்கள் பகலிலும், இரவிலும் தங்கிச் செல்வதற்கு தெரு வோரங்களில் தெரிந்தெடுத்த இடங்களில் கட்டப்பட்ட தங்குமிடங்கள் ”அம்பலம்” எனப்படும்.
இந்த நிலையில், இலங்கையின் வடக்கிலும், தென்னிலங்கையிலும், ஏனைய பகுதிகளிலும் பண்டைக் காலத்தில் அம்பலங்கள் கட்டப்பட்டிருந்தன.
தென்னிலங்கையின் சிங்கள சந்தேசய பாட்டுக்களில் (தூதுப் பிரபந்தங்களில்) அம்பலங்கள் பற்றியும், அவற்றில் இரவில் தங்குவோரிடையில் நடைபெறும் சம்பாஷனைகள் பற்றியும் அழகாகக்கூறப்பட்டுள்ளது.
வடக்கில் அம்பலங்கள் மிகக் குறைவாகவே இருந்தன.
வடக்கில் அம்பலங்கள் எந்தெந்த இடத்தில் இருந்தன, அவை எவ்வெக்காலங்களில் எப்படிக் கட்டப்பட்டிருந்தன என்பதை ஆராய்ந்து கட்டுரைகளும், நூல்களும் எழுதப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை!!

எனக்குத் தெரிந்த வரையில், யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை பிரதான வீதியும், மானிப்பாய் - கைதடி தெருவும் எனது கிராமமான உடுவிலில் ஒன்றையொன்று வெட்டுமிடத்தின் வட மேற்கு மூலையில், பண்டைய காலத்தில் கட்டப்பட்ட அம்பலம் ஒன்று இருந்தது.

இதனை “மருதனார் மடம்” என்பர்!
இதற்கு அருகாமையில் தண்ணீர் கேணி, கல்லினால் செய்யப்பட்ட நீர் தாங்கிகள், பெரு மரங்கள் எல்லாம்இருந்தன.
இந்த நீர் தாங்கிகள் மாடுகள் தண்ணீர் குடிக்கவும், மனிதரின் பாவனைக்கும் செய்யப்பட்டிருந்தன.

தென்னிலங்கைக்கு மாட்டு வண்டிகளில் செல்வோர்கள் இந்த மடத்தினில் கூடியே பின்னர் ஒருமித்து செல்வதாகவும், தெற்கிலிருந்து வரும்போது பிரிந்து செல்வதாகவும் கூறப்பட்டது.

பிற்காலத்தில் பஸ் வண்டிகள் ஓட ஆரம்பித்த காலத்தில், இந்தச் சந்தியில் இறங்குவோர்கள் ”மருதனார் மடச் சந்தி” யில் இறங்குவதாகக் குறிப்பிட்டு, இந்தச் சந்தி ”மருதனார் மடச் சந்தி ” எனப் புகழ் பெற்றது.
ஆனால், மருதனார் ம்டம் பற்றித் தெரியாதவர்கள் இப்போது ஒரு பெரும் பகுதியை மருதனார் மடம் பகுதி என்கின்றனர்!!
சந்தியிலிருந்து அரைக் கிலோ மீற்றர் தூரத்திற்கு தெருவினால் செல்லும் இடங்களை எல்லாம் Road Development Authority ஆனது ”முருதனார் மடம் என எழுதியிருப்பதை அவதானிக்கலாம்.

ஒரு விடயத்தினைச் செய்யும்போது ஆராய்ச்து சரியாகச் செய்யவேண்டும் என்பது பற்றி இன்று எவரும் கவலைப் படுவதில்லைத்தானே?
அதிலும் தமிழர்கள் பெரும் மோசமானவர்கள் என்பதும் தெரியும்தானே?
இந்த மருதனார்மடமானது இன்றும் உள்ளது.

ஆனால், அதன் தெருவோரமாக இருந்த காணிப் பகுதியை, முன்னர் அப்பகுதிக்கு AGA ஆக இருந்த ஒருவர், உள்ளுராட்சி சபையில் அங்கத்தவர் ஆக இருந்த இணுவிலைச் சேர்ந்த ஒருவரும், வேறு சிலரும் கள்ள உறுதிகளை முடித்து, தமதாக்கியது மாத்திரமன்றி, அவ்விடங்களில் கடைகளையும்கட்டியுள்ளனர்!
எது விதத்திலும், மடத்தின் பழைய கட்டிடம்மிகவும் அண்மைக் காலம்வரை இருந்தே வந்தது, இன்றும் அதன் சிதைவுகள் உள்ளன!

இதைவிட, இச்சந்தியின் வடகிழக்கு மூலையில் காணிகளை வாங்கி இந்துப் பெண்களுக்கான பள்ளிக்கூடத்தினை கட்டிய சேர். பொன்னம்பலம் இராமநாதன் என்பவர், சந்தியின் வடகிழக்கு மூலைப் பகுதியில் இருந்து கேணி, கல் நீர் தாங்கிகள் என்பவைகளை உள்ளடக்கி பாடசாலை மதில் சுவரைக் கட்டிவிட்டார்.
இது உடுவில் கிராமத்தவர்களுக்கும். ஏனையோருக்கும் இராமநாதனுடன் முரண்பாடுகளை உருவாக்கி, கல்லடி வேலன் இராமநாதனின் இந்தச் செய்கையைக் கண்டித்துக் கண்டனப் பாட்டுக்களும் பாடியிருந்தார்.

அந்தப் பாட்டுக்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்தன.
ஆனால், இராமநாதனின் இந்தச் செய்கையை மக்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏன் எனில் அவருக்கு பிரித்தானிய ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும்செல்வாக்கு இருந்தது.
இராமநாதன் உண்மையில் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மானிப்பாயில் திருமணம் செய்து உருவான வழித் தோன்ற்லாகும்!
இதனால், அவர் உடுவில் கிராமத்தவர்களின் நலன்களை கருத்தில் கொள்ளவில்லை. தனது குறிக்கோளை அடைவதில்தான் கண்ணாக இருந்தார்!

உடுவில் கிராமத்தவர்களுக்கான சுடலையானது மருதனார் மடச் சந்திக்கு அருகில் இணுவில் கிராமத்தில் இப்போது அமைந்துள்ள அனுமன் கோயிலுக்கு மேற்குப் புறமாக (பின் புறமாக) அமைந்திருந்தது.
இதனை அன்று ”சின்னாலங்கண்டடிச் சுடலை” என அழைத்தனர்.
இங்கு இறந்தவர்களின் உடல்களை எரிப்பது, தான் கட்டும் பெண்கள் கல்லூரியின் மாணவிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும் எனக் கூறி, அந்தக் காணியை அரசிடம் இருந்து தான் வாங்கிவிட்டு, இராமநாதன் உடுவில் மக்களுக்கான சுடலையை இணுவில் ரயில் நிலையத்திலிருந்து 1 கி. மீற்றர் தொலைவில் இருக்கும் வயல் பகுதியில் அமைத்துக் கொடுத்தார். இதற்கு பிரித்தானிய அரசு ஒத்துழைப்பினை வழங்கி இருந்தது.
இந்தச் சுடலையை ”பூவோடை சுடலை" என்பர்! இந்தச் சுடலையானது உடுவில் கிராமத்தவர்களுக்கான சுடலையாகும்.

இதனால், உடுவில் கிராமத்து மக்கள், 3- 6 கிலோமீற்றர்கள் இறந்த உடலை வெயில், மழைகளில் காவிச் சென்றே இன்றும் எரிக்கவேண்டிய கட்டாயம் இருந்துவருகிறது!
இதனால், உடுவில் கிராம மக்கள் இன்றும் சேர் பொன்னம்பலம் இராமநாதனைத் திட்டுவதூடாக அவர் நினைவு கூரப்படுகிறார்!!
யாழ்ப் பாணப்பகுதியின் அம்பலங்களின் நிலை”மருதனார் மடம்” போன்றதாகத்தான் பெரும்பாலும் இருக்கமுடியும்.

ஆனால், தென்னிலங்கையில் நிலைமை சற்று வேறுபட்டதாகக் காணப்படுகிறது.
நண்பர்களே!
தென்னிலங்கையின் PANAVITIYA AMBALAMA என்ற மரத்தால் கட்டப்பட்ட அம்பலம் பற்றிய ஒரு கட்டுரை கீழே தரப்பட்டுள்ளது.

படித்துப் பாருங்கள்!! - 
Vettivelu Thanam 

THE WOODEN WONDER OF PANAVITIYA AMBALAMA
25 June, 2017
Text and pix: Mahil Wijesinghe
Ambalama’ is a Sinhala word for a wayside rest-house. I first saw one when I was trekking to Sri Pada, (Adam’s Peak) with my grandmother in the latter part of the 1970s. I saw several buildings along the trek up to the peak where weary pilgrims stop over to take a respite from their long journey.
Back in those days, pilgrimages and carter’s travels lasted weeks or even months. These long journeys were often by foot or by cart. Each carried his or her provisions and stopped for rest at Ambalamas constructed and designed as architecturally simple buildings for providing shelter to weary travellers, free of charge. It was also a place where travellers can rest, eat, wash and possibly stay overnight.
Village Council

Ambalama is closely linked with Sri Lankan culture and embedded in their day to day-life. One of the brilliant scholars in Sri Lanka, Ananda Coomaraswamy, in his Medieval Sinhalese Art (1908) writes “the Ambalama served not only as a halting place for strangers, but was generally resorted to for exchange of news and a quiet chew.”

Coomaraswamy further pointed out that it served as a meeting place for the Village Council (Gam-sabawa), and was intimately associated with life in the village community. There were many of these Ambalamas at no great distance apart on frequent paths, says Coomaraswamy. There were better ones in each village, erected by the villagers, or by a rich person or even a woman, anxious to perform a meritorious act.

In addition, references to the wayside rests are found in ancient local texts as well as in the chronicles of British writer, traveller and prisoner of Kandyan Kings, Robert Knox. Ambalamas are also mentioned in local Sinhala folklore.

Travel itself has rapidly changed over time, and today, Ambalamas still stand along the highways reminding us of the days gone by. Recently, we had an opportunity to see one such astonishing Ambalama in the Kurunegala District. It is the Panavitiya Ambalama, situated in a sleepy village close to Matiyagane near Narammala in the Kurunegala District.
After a comfortable drive down the Negombo-Kurunegala highway, before reaching Narammala town, we turned to the left, to the road that led to the Metiyagane school junction. From there we turned left, proceeded another two and a half kilometers on the wooded Dangalla Road and reached the Ambalama, located on the right side in an archaeological reserve flat land adjoining the Lankathilakarama Viharaya at the border of a stretch of coconut land, surrounded by lush green paddy fields. On our way to the Ambalama, we asked directions several times from villagers as it is quite difficult to find your way if you are a first time visitor.

Wayside shelter
As we stopped the vehicle alongside the road opposite the Ambalama and peered out at the wooden structure standing in a cleared flat land bordering a stretch of coconut cultivation, we were disappointed. In fact, for a minute we wondered if we had come to the correct place. From where we stood we could see nothing of the wood carvings that this Ambalama was famous for.
But, it didn’t take long for us to discover its wealth of wooden wonder. As we entered the Ambalama, carvings seemed to overwhelm us, covering almost every available space. The carvings are a unique combinations of art themes.
According to historical notes, the Panavitiya Ambalama was built in the 18th century and it is believed that it may have stood as a wayside shelter for travellers on the ancient footpath leading from Dambadeniya to Kurunegala and Yapahuwa. It is constructed on a wooden platform on four rounded large stones, one foot in height raised from ground level to prevent damage from termite attacks. The roof is supported by 28 wooden pillars of which nine inner wooden pillars, six inches in height, display ornate carvings and motifs. The nineteen pillars that formed the outer posts were less elaborately carved.
One of the striking features of the Panavitiya Ambalama is a wooden pillar with a carving of entwined cobra hoods. This kind of wood carving is rare in Sri Lanka.

The Ambalama is famed for many finely carved pillars depicting majestic birds. Each pillar has its own individual carving. Besides the wildlife carvings, some pillars are carved with wrestling men, dancing women, musicians, acrobats, persons greeting each other, persons chanting, etc.
The Ambalama itself is the finest living example of Sri Lankan architecture and art showcased in wood. Almost every inch of the wooden structures is decorated with elaborate, intricate carvings on rafters and beam columns. Some of these wooden pillars have been renovated by the Department of Archaeology.
The value of the Panavitiya Ambalama lies in its elaborate carpentry work of beams and pillars. When I entered the Ambalama and observed the carvings, it reminded me of my visit to the Embekke Devale several months ago. Some of the Ambalama’s carvings bear resemblance to the ones at Embekke Devale at Davlagala in Kandy. Having observed the antiquity of the structure, we noticed that it has been repaired and reconstructed over the years. We understood that some of the wooden beams have been replaced in some places.

Walking around the site we found fragments of the small Kandyan Peti-ulu tiles at the site indicating that originally the roof was tiled with Peti-ulu. The Department of Archaeology has renovated and restored the roof, replacing it with modern tiles.
Magical place

Visiting this enchanting Ambalama, present day visitors can get a unique experience of the glory of the Dambadeniya Kingdom and some of the delightful wooden masterpieces of artistic creations of wood carvers of the bygone era.

Today, it stands as a unique monument of our ancient transport system. Perhaps, we were the only visitors to the site that day. I always wonder why visitors in Colombo never come here on a trip. Maybe they never knew this magical place even existed.

The road in front of the Ambalama is deserted and only used by the villagers. It is rarely approached by outsiders. We sat down on the huge beams of the Ambalama spending some time to enjoy a cup of tea with ‘Wandu’ a village sweet cake made with flour wrapped in ‘Kenda’ leaves, found abundantly in the wayside thickets.

(By the way, Ambalamas still exist in Colombo too. One good example is found on the Pitakotte-Ethulkotte Road, not far from the Archaeology Department Office. It has no carvings though.)

Tuesday, June 6, 2017

இந்தக்கட்டடங்களின் வடிவமைப்பாளர் யார்?



தமிழர் கட்டடக்கலை என்று உரிமை கோரப்படும் எவையும் தமிழர்களுடையது அல்ல என்று சிந்திக்கதோன்றுகின்றது. 

 http://www.shunya.net/Pictures/South%20India/Tanjore/TempleNight02.jpg

சிற்ப சாத்திரம், மனையடி சாத்திரம் என்று கூறப்படும் ஏடுகளில் சொல்லப்பட்ட விடயங்களை எந்தவித வேள்விகளும் இல்லாமல் இன்றும் பின்பற்றும் சமூகம் குறித்த விடயத்தை வெறுமனே பிரதி செய்கின்றது அல்லது தங்கள் வசதிக்கு ஏற்ப நவீன முறைகளையும் பழைய முறைகளையும் இரண்iடையும் கலந்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர் என்பதை நாம் ஏற்கொள்ள வேண்டும்.

விடயத்திற்கு வருவோம். உண்மையில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தஞ்சைப் பெரிய கோயில் போன்ற பிரமாண்டமான கட்டடம் ஒன்றை தமிழர்களால் கட்ட முடிந்திருக்குமானால் அதன் தொடர்ச்சியாக அந்த மக்களால் இன்றைய திகதியில் என்னவெல்லாம் கட்டியிருக்க முடியும்? ஏன் அவ்வாறு கட்டடவில்லை? அல்லது ஏன் அவ்வாறு கட்டத்தோன்றவில்லை? 

கட்டடங்கள் காலத்தைப் பிரதிபலிக்கின்றன என்பது பொதுவான உண்மை அதாவது கட்டடங்கள் எந்தக் காலப்பகுதியில் கட்டப்பட்டதோ, அக்கட்டடங்கள் குறித்த காலப்பகுதிக்குரிய கட்டுமாணத் தொழில்நுட்பம், அக்கால மக்களின் தேவை மற்றும் அதனோடு சேர்ந்த வாழ்க்கை முறை என்பன பற்றி அறியக்கூடியதாக இருக்கும். தமிழர்களின் கட்டடக்கலையில் கோயில்கள் மாத்திரமே அதிகமாக எஞ்சியிருக்கின்றது. அப்படியாயின் கோயில்களை மட்டும் கொண்டு குறித்த காலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில்நுட்ப அறிவு வாழ்க்கை முறை என்பவற்றை அறிய முடியுமா? அவ்வாறான ஒரு சமூகத்தை 500 வருடங்களுக்கு முன்னர் வந்த ஐரோப்பியர்கள் அடிமைகளாக மாற்ற முடிந்திருக்குமா?

சரி தமிழர்களின் கோவில் கட்டடக்லை தற்போதைய தழிர்களுடையது அல்ல என்பதை ஏற்றுக்கொண்டால். யார அவற்றை செய்தார்கள்? ஏன் அவற்றை செய்தார்கள்? கட்டடக்கலை சார் நூலானது மாயன் நூல் என்று சொல்லப்படுகின்றது, அப்படியாயின் குறித்த கட்டடங்கள் மாயன்களால் கட்டிக்கொடுக்கப்பட்டதா? அல்லது முன்பு இந்தப்பகுதியில் மாயன்கள் தான் வசித்து வந்தார்களா? மாயன்களும் தமிழர்களும் ஒன்றா? தற்போது மயனகளுடையது என்று சொல்லப்படும் கட்டடங்களுக்கும் தமிழ்ர்களுடைய கட்டடங்களுக்கும் ஒத்திசைவுகள் இல்லை அதனால் குறித்த கட்டடங்கள் வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்களும் தமிழர்களும் இணைந்து செய்த வேலைகளா? இவை எல்லாம் விடை காணவேண்டிய கேள்விகள்.

குமாரலிங்கம் பதீதரன்
கட்டடக்கலைஞர்

Saturday, April 8, 2017

1,400 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டீஸ்:

நாடு முழுவதும் 100 நகரங்களை பொலிவுறு நகரங்களாக (ஸ்மார்ட் சிட்டீஸ்) மாற்றுவதற்கான தொடர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது மத்திய அரசு. ஆனால், 1,400 வருடங்களுக்கு முன்பே பல்லவர்கள் ஆட்சியில் பொலிவுறு நகரங்கள் உருவாக்கப்பட்டதை கூரம் செப்பேடு தெளிவாக விவரிக்கிறது.
கி.பி. 550 முதல் 560 வரையில் காஞ்சியை ஆண்ட முதலாம் பர மேஸ்வரவர்மன் தனது பெயரில் பரமேஸ்வரமங்கலம் என்ற பொலிவுறு நகரை உருவாக்கினான். அப்போது கடைபிடிக்கப்பட்ட நெறிமுறை அலகுகளை கூரம் செப்பேடு விவரிக்கிறது.
விவசாய உற்பத்திக்கு ஏற்ற மண்வளம், நிரந்த நீர் மேலாண்மை திட்டம், தண்ணீர் பகிர்மான அல குகள், கட்டுமானத்துக்கு ஏற்ற தரமான மண் வள பகுதி, கோயில் மண்டபம், நிரந்தர வைப்புக்காக வழங்கப்பட்ட தானங்கள் இவற்றோடு வணிக பெருமக்கள், கருவிகள் தயாரிப்போர், அறிவுசார் பெருமக்கள் ஆகியோருக்கான வசதிகள் இவை அனைத்தும் பொலிவுறு நகர் உருவாக்கத்தின் போது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது அரக்கோணம் அரு கில் உள்ள பரமேஸ்வரமங்கலத்தை பொலிவுறு நகராக வடிவமைப்ப தற்காக 6300 (98.44 ஏக்கர்) குழி நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்ட து. இந்த நகரை உருவாக்கும் பொறுப்பு உத்தரகாணிகா மகா சேசன் தத்தன் என்ற ஆணத்தியி டம் தரப்பட்டது. பொலிவுறு நகரில் முதலில் பரமேஸ்வர தடாகம் என்ற ஏரி வெட்டப்பட்டது. அதற்கு தேவையான நீர் இருப்புக்காக பாலாற்றில் இருந்து பெரும்பிடுகு என்ற கால்வாய் வெட்டப்பட்டது.

இங்கு தண்ணீரைப் பயன்ப டுத்தும் பகிர்மான உரிமைகள் அனைத்தும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டதால் தண்ணீர் தாவாக்கள் தவிர்க்கப்பட்டன. கட்டுமானங்களுக்குத் தேவையான செங்கற்களை உற்பத்தி செய்வ தற்காகவே சூளைமேட்டுப்பட்டி என்ற பகுதி உருவாக்கப்பட்டது.
ஆன்மிக திருவிழாக்கள் மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதால் பொலிவுறு நகரில் முதலில் கோயில் எழுப் பப்பட்டது. ஊருக்கு நடுவில், பாரதம் வாசிக்கும் மண்டபம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இது நீதிக் கதைகளைச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தும் இடமாகவும் அரசின் ஆணைகள், சட்டதிட்டங்களை மக்களுக்குச் சொல்லும் ஊடக மையமாகவும் செயல்பட்டன. வணிகர்கள், பொற்கொல்லர்கள், அறிவுசார் பெருமக்கள், மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நகரின் முக்கிய பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டது. உலக வணிகர்கள் வர்த்தகம் செய்வதற்கான பாது காப்பான வழிமுறைகளும் ஏற்ப டுத்தப்பட்டன.

இதுகுறித்து மேலும் தகவல்க ளைத் தந்த வரலாற்று ஆய்வாள ரும் சேலம் ஆத்தூர் அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியருமான ஜெ.ஆர்.சிவராம கிருஷ்ணன், ‘‘கூரம் செப்பேடு 7 ஏடுகளை (14 பக்கங்கள்) கொண் டது. இதில் 10 பக்கங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. 4 பக்கங்கள் தமிழில் உள்ளன. இதில்தான் பரமேஸ்வரமங்கலம் உருவாக்கப்பட்ட விதம் விவரிக் கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதலாவது பொலிவுறு நகரங்களாக மொகஞ்சதாரோ, ஹரப்பாவை சொல்லலாம். அகன்ற வீதிகள், வீடுதோறும் குளியலறைகள், பாதாளச் சாக்கடைகள், மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட இப்போது நமது விவாதத்தில் இருக்கும் அத்தனை வசதிகளும் இந்நகரங்களில் இருந் தன. அதேபோல், சங்ககால தமிழர்களின் பொலிவுறு நகர நிர்மாணத்துக்கு எடுத்துக்காட்டு மதுரை. தாமரை மலரின் வடிவத் தைக் கொண்ட மதுரை நகரில் தெருக்கள் ஆறுகளைப் போல நீண்டும் அகன்றும் இருந்ததை ‘ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெ ரு’ என்று புகழ்கிறது பரிபாடல். பரமேஸ்வரமங்கலமும் இத்தகைய சிறப்பு அம்சங்கள் அனைத்தும் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.

http://m.tamil.thehindu.com/tamilnadu/1400-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8649213.ece

Monday, January 2, 2017

இலங்கைத் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் - விவசாய அபிவிருத்தியும் நீர்வளப் பயன்பாடும்

எழுத்தாளர்: இரா.சிவசந்திரன்
முகவுரை:-
தமிழர் பாரம்பரியப் பிரதேசம் வரலாற்று ஆதாரங்களின் படி இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாண எல்லைப்பரப்பை விடப் பரந்ததெனினும் இங்கு ஆய்வு நோக்கம் கருதி இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணம் என்றே கொள்ளப்படுகின்றது. வடகீழ் மாகாணம் 18,333 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் 558 சதுரகிலோமீற்றர் உள்நாட்டு நீர்ப்பரப்பையும் உள்ளடக்கிய பிரதேசமாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் இது 28.8 வீதமாக அமைகின்றது. இவை எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு என்பன வடமாகாணத்தினுள்ளும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என்பன கிழக்கு மாகாணத்தினுள்ளும் அமைகின்றன.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் உழைக்கும் மக்களில் 60 வீதத்தினர் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இப்பிரதேசத்தில் விவசாயமே பாரம்பரியப் பொருளாதார நடவடிக்கையாக, நீண்டகாலமாக பெரு மாற்றங்கள் எதுவுமின்றி இருந்து வருகிறது. பிற்காலத்தில்; விவசாயத்துறையில் புகுத்தப்பட்ட புதிய நுட்ப முறைகள் இப்பகுதி விவசாயிகளிடையே வேகமாகப் பரவி உள்ளன. இதில் மாற்றுவிவசாயம், விவசாய உள்ளீடுகள், நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவம் தொடர்பான நுட்ப முறைகள் குறிப்பிடத்தக்கவை.
நிலப்பயன்பாடு:-
தமிழர் பாரம்பரியப் பிரதேசம் அடக்கியுள்ள வடக்கு – கிழக்கு மாகாணங்களின் விவசாய நிலப்பயன்பாட்டை இரு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம்.
01) தோட்டச்செய்கையோடு தொடர்பான விவசாய நிலப்பயன்பாடு
02) நெற்செய்கையோடு தொடர்பான விவசாய நிலப்பயன்பாடு
இப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.43 வீதத்தையும் மொத்தக் குடித்தொகையில் 35.4 வீதத்தையும் உள்ளடக்கிய யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதியே தோட்டச் செய்கை அதிகளவுக்கு வளர்ச்சி பெற்ற பகுதியாக உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைக்கப்பெறும் தரைக்கீழ் நீர்வளத்தைப் பயன்படுத்தி இப்பகுதி வாழ் மக்கள் வருடம் முழுவதும் பயிர் செய்கின்றார்கள். மிகவும் சிறிய அளவினதான துண்டு நிலங்களில் செறிவான முறையில் தோட்டப் பயிரச்செய்கை இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் வேறு எப்பாகத்திலும் இவ்வகையான செறிந்த பயிரச்செய்கை முறை மேற்கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதி செறிவான குடித்தொகையை கொண்டுள்ளது. தோட்ட நிலங்கள் அதிகளவு கொண்ட பகுதிகளில் சதுர மைலுக்கு 3000க்கு மேற்பட்டோர் வாழ்கி;ன்றனர்.
யாழ்ப்பாண குடாநாடு 1025 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. இதில் 60 வீதமான பகுதியே மக்கட் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகின்றது. ஏனைய 40 வீதமான பகுதி மணல், பாறை ஆகியவற்றையும் சதுப்பு நிலங்களையும் கொண்டுள்ளதால் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமையவில்லை. மக்களுக்கு பயன்படுகின்ற 60 வீதமான நிலப்பகுதியில் மூன்றிலொரு பகுதி குடியிருப்பு நிலங்களாக உள்ளன. பனை, தென்னை ஆகிய மரப்பயிர்கள் மற்றொரு மூன்றிலொரு பகுதியிற் காணப்படுகின்றன. எஞ்சிய பகுதியே நெற்பயிரும், தோட்டப்பயிரும் செய்கை பண்ணப்படும் விவசாயப்பகுதியாகும். அண்மைக்காலங்களில் நெல்வயல் நிலங்கள் தோட்டநிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் தோட்ட நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் அவதானிக்க முடிகின்றது.
இப்பகுதித் தோட்டங்களில் புகையிலை, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், திணை வகைகள், பழ வகைகள் என்பன பெருந்தொகையாக விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உப உணவுத்தேவையின் கணிசமான பங்கு யாழ்ப்பாணக்குடாநாட்டு உற்பத்தியாலேயே யுத்தத்திற்கு முன்னர்  பூர்த்தி செய்யப்பட்டது. உதாரணமாக இலங்கையில் வெங்காயச் செய்கைக்கு உட்பட்ட பரப்பளவில் 38 வீதத்தையும், மிளகாய்ச் செய்கைக்குட்பட்ட பரப்பளவில் 15 வீதத்தையும் யாழ்ப்பாணக் குடாநாடே அடக்கியிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் விவசாயிகள் புதிய தொழில் நுட்பமுறையினை புகுத்துவதில் பேரார்வம் கொண்டவர்கள். தோட்டச்செய்கைக்கு நீர் இறைக்கும் இயந்திரம், செயற்கை உரம், களைநாசினி, கிருமி நாசினி என்பன பெருமளவு பயன்படுத்தப்பட்டு விவசாய உற்பத்தி உயர்வடைந்த நிலை காணப்பட்டது.
யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த பிரதான நிலப்பகுதியின் நிலப்பயன்பாட்டை தாழ்நிலப்பயன்பாடு, மேட்டு நிலப்பயன்பாடு என வகைப்படுத்தலாம். மேட்டு நிலப் பயன்பாடு இப்பகுதியில் அதிகம் விருத்தி அடையவில்லை. தாழ்நிலப் பயன்பாட்டில் நெற்செய்கையே முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆற்று வடிநிலப் பகுதிகளிலும் நீர்த்தேக்கத்தினை அண்டிய பகுதிகளிலும் வண்டல்மண், களிமண் படிவுகள் காணப்படும் தாழ்வான பகுதிகளிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இப்பகுதிகளில் பழைய பாரம்பரிய கிராமிய விவசாய நிலப்பயன்பாடும் புதிய குடியேற்றத்திட்ட நிலப்பயன்பாடும் வௌ;வேறான பண்புகளைக் கொண்டமைந்துள்ளன. மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளின் கரையோரமாகப் பழைய விவசாய நிலப்பரப்புகள் பரந்துள்ளன. முன் காடுகளாக இருந்து தற்போது நில அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளமைந்த பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் அமைக்கப்பட்டன.
1935 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நில அபிவிருத்திச் சட்டத்தின் பின்னர் இப்பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பல நோக்கு குடியேற்றத்திட்டம், பாரிய குடியேற்றத்திட்டம், கிராம விஸ்தரிப்புத் திட்டம், மத்திய வகுப்பார் குடியேற்றத்திட்டம், இளைஞர் திட்டம் ஆகியனவாக இவை அமைக்கப்பட்டுள்ளன. குடியடர்த்தி மிக்க பகுதிகளில் இருந்து மக்களை நகர்த்தவும், நிலமற்றோருக்கு நிலமளிக்கவும், வேலையற்றிருந்தோருக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், குடியேற்றத்திட்ட உருவாக்கம் ஓரளவு உதவியுள்ளது. கிளிநெச்சியில் இரணைமடுக்குளத்திட்டம், மன்னாரில் கட்டுக்கரைக்குளத்திட்டம், வவுனியாவில் பாவற்குளத்திட்டம், திருகோணமலையில் கந்தளாய் குளத்திட்டம், மட்டக்களப்பில் உன்னிசசைக்குளத்திட்டம், அம்பாறையில் கல்லோயாத்திட்டம் என்பன மாவட்டத்திற்கொன்றான உதாரணங்களாகும். பிற்;காலங்களில் இப்பகுதிகளிலே படித்த இளைஞர்களுக்கென உபஉணவு உற்பத்தித் திட்டங்கள் பல ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை மேட்டு நிலப்பயிர்களை ஊக்குவிப்பனவாகவும், ஏற்று நீர்ப்பாசன வசதியுடன் கூடிய விவசாய அபிவிருத்தி திட்டங்களாகவும் அமைந்தன.
இவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்த முத்தையன் கட்டு இளைஞர் திட்டம், கிளிநெச்சி மாவட்டத்தில் அமைந்த விஸ்வமடு, திருவையாறு, இளைஞர் திட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்கன. ஏனைய குடியேற்றத்திட்டங்கள் போலன்றி இளைஞர் திட்டங்கள் பொருளாதார ரீதியில் திருப்தியைத் தருவனவாக விருத்தியடைந்திருந்தன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் மொத்த நிலம் ஏறத்தாழ 156692 ஹெக்டேயர் ஆகும். இது இலங்கையின் மொத்த நெல் விளைபரப்பில் பரப்பில் 31.3 வீதமாக அமைகின்றது. இப் பிரதேசத்தின் மொத்த நெல் விளை பரப்பில் 62 வீதத்தைக் கிழக்கு மாகாணம் உள்ளடக்கியுள்ளது. மொத்த நெல் விளை நிலத்தில் 33 வீதம் பருவ கால மழையை நம்பிய மானாவாரி நிலங்களாக உள்ளன. ஏனையவை நீர்ப்பாசன வசதியுடைய குளங்களை அடுத்துள்ளன. பாசன வசதியுடைய நிலங்கள் சிலவற்றிலே வருடத்திற்கு இருதடவை நெல் விளைவிக்கப்படுகின்றது. வருடத்திற்கு இரு தடைவ நெல் விளைவிக்கப்படும் விளைபரப்பு 28 வீதமாக அமைகின்றது.
பொதுவாக இப்பிரதேசத்தில் அதிகளவு நெல் விளைபரப்பு பருவ மழையை நம்பியதாகையால் பருவமழை பெய்துவரும்; காலங்களில் நெல் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. நெற்செய்கையில் நிலவும் இந் நம்பிக்கையற்ற நிலையை மாற்றவும் மிகுதி 72 வீதமான நிலப்பரப்பில் இருபோகச் செய்கையை மேற்கொள்ளவும் ஏற்கனவே பயிர்செய் பரப்பாகப் பயன்பட்டு வரும் நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசன வசதியை அதிகரித்தல் வேண்டும். இவற்றில் தெளிவு பெறுவதற்கு இப்பிரதேசத்திலுள்ள நீர்வளம், பாசன வாய்ப்புகள் பற்றி தெளிவு அவசியமாகும்.
நீர்வளமும் நீர்ப்பாசனமும்
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் விவசாயச் செய்கை பெருமளவுக்கு மழை வீழ்ச்சியை நம்பியதாகவே அமைந்துள்ளது. வருடம் 2000 மில்லி மீற்றருக்கு (75 அங்குலம்) குறைந்த மழைவீழ்ச்சி பெறும் இலங்கையின் வரண்ட வலயத்தின் பெரும்பாகத்தை உள்ளடக்கியுள்ள தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் வருடச் சராசரி மழைவீழ்ச்சி 1250 மி.மீ ஆகும். மழைவீழ்ச்சிப் பரம்பலில் பிரதேச வேறுபாடுகள் உள்ளன. மன்னார், அம்பாறை மாவட்டங்களின் தென் பகுதிகள் குறைந்தளவான 750 மி.மீ முதல் 1000 மி.மீ வரை மழை பெற, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் மேற்குப் பகுதிகள்  உயர்ந்தளவான 2000 மி.மீ மேற்பட்ட மழைவீழ்ச்சியை பெறுகின்றன. எனினும் 1000-2000 மி;மீ வரை (50- 75 அங்குலம்) மழை பெறும் பரப்பளவே தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் அதிகமாகும். அதாவது யாழ்ப்பாணம், கிளிநெச்சி, வவுனியா, திருகோணமலை மாவட்டங்கள் முழுவதும் மன்னார், அம்பாறை ,மட்டக்களப்பு  மாவட்டங்களின் பெரும் பாகமும் 1000 மி.மீ முதல் 2000 மி.மீ வரை மழை பெறும் பகுதிகளாக அமைகின்றன.
இப்பகுதி வடகீழ் மொன்சூன் காற்றினாலும், சூறாவளி நடவடிக்கைகளினாலும் ஒக்டோபர், முதல் ஜனவரி வரையிலான காலப்பகுதியிலேயே அதிகளவு மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. இப்பகுதியில் வருடம் முழுவதும் கிடைக்கப்பெறும் மொத்த மழைவீழ்ச்சியின் 70 வீதம் மேற்படி நான்கு மாத காலத்திற்குள்ளாகவே பெறப்படுகின்றது. இவ்வாறு பெறப்படும் மழை நீரில் 20-25 வீதம் புவி மேற்பரப்பு ஓடு நீராகக் கடலையடைகின்றதெனவும் 40–45 வீத நீர் ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பினால் இழக்கப்படுகின்றதெனவும், எஞ்சிய நீரே பயன்பாட்டிற்குரியதாக அமைகின்றதெனவும் சில கணிப்பீடுகளிலிருந்து தெரிகின்றது. இவ்வளவு குறைந்த காலத்தில் மழைவீழ்ச்சியினால் மாத்திரம் கிடைக்கும் நீர் வளத்தைப் புவி மேற்பரப்பு நீராகவும் தரைக்கீழ் நீராகவும் சேமித்துப் பாசனப் பயன்பாட்டிற்கு உட்படுத்தும் போதே இப்பிரதேசத்தின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் பாசனத்திற்குக் கிடைக்கக் கூடிய நீர் வளங்களை இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
01) புவி மேற்பரப்பு நீர்வளம்
02) தரைக்கீழ் நீர்வளம்
புவி மேற்பரப்பு நீர்வளம்
புவி மேற்பரப்பு நீர் வளமே யாழ்ப்பாணக்குடாநாடு தவிர்ந்த பிரதான நிலப்பகுதியில் பாசனத்திற்குப் பயன்படும் வளமாய் உள்ளது. தரைக்கீழ் நீர்வளம் முக்கியமாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாசனத்திற்குப் பயன்படுகின்றது.
புவிமேற்பரப்பு நீர்வளம் என்னும் போது ஆறுகள், குளங்கள் என்பவற்றில் தேக்கப்படும் நீரினைக் குறிக்கும். இப்பிரதேசத்தில் மகாவலி தவிர ஏனையவை வறண்ட பிரதேசத்தில் ஊற்றெடுக்கும் ஆறுகளேயாகும். பருவ காலங்களில் மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீர் வளத்தையே இவை கொண்டுள்ளன. இவ்வகை ஆறுகளையோ கிளை ஆறுகளையோ அவற்றின் வடிநிலப்பரப்பில் தடுத்து அணைகட்டி குளங்களாக உருவாக்கியுள்ளனர். ஒரு சில ஆறுகள் திசைதிருப்ப்பட்டிருக்கின்றன. இவ்வாறான பாசன நாகரிகம் கிறீஸ்து காலத்திற்கு முன்பாகவே தமிழர் பிரதேசங்களில் பரவியிருந்தமையை மகாவம்சமே குறிப்பிடுகின்றது. குவேனி விஜயனைச் சந்தித்தபோது இவ்வாறான குளமொன்றின்  அணைக்கட்டில் நூல்நூற்றுக் கொண்டிருந்தாள். எனவும், அக்குளம் மன்னார் பிரதேசத்தில் அமைந்திருந்ததெனவும் மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகள் சிலவற்றிலிருந்து தெரிய வருகின்றது.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியிற் காணப்படும் குளங்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
01) சிறு குளங்கள்( இவை 200ஏக்கர் பரப்பளவுக்கு உட்பட்டவை)
02) நடுத்தரக் குளங்கள்(200-1500 ஏக்கர் பரப்பளவுக்கு இடைப்பட்டவை)
03) பாரிய குளங்கள் ( 1500 ஏக்கர் பரப்பளவுக்கு மேற்பட்டவை)
இவற்றுள் சிறு குளங்களின் பராமரிப்பு அவ்வப்பிரதேச கமநல சேவை நிலையத்திடம் உள்ளது. ஏனையவை நேரடியாக நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளவையாகும். 1900 ஆண்டில் இலங்கையில் நிறுவப்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களமே இந் நாட்டின் விவசாய அபிவிருத்திக்கு உதவும் பொருட்டு நீர்ப்பாசனத்திட்டங்கள் பலவற்றை உருவாக்கி வருகின்றது.
1959 இல் நீர்ப்பாசனத்திணைக்களம் இலங்கைத்தீவின் உள்ளார்ந்த நீர்வளம் பற்றிய குறிப்புகளுடன் படம் ஒன்றினை வெளியிட்டது. இதில் இலங்கையிலுள்ள 103 ஆற்று வடிநிலங்கள் பலவற்றில் பெருந்தொகையான நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள், அமைத்து பாசன அபிவிருத்தி செய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் விபரமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. மேற்படி 103 ஆற்று வடிநிலங்களில் 61 வடிநிலங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
நீர்ப்பாசனத்திணைக்களம், வடிகால் விருத்தியையும் நீர் வெளியேறும் அளவையையும் கருத்தில் கொண்டு ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கப்பெறும் நீரின் ஆண்டுச் சராசரி அளவை மதிப்பிட்டுப் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி வவுனியாவையும் ஆனையிறவையும் இணைக்கும் கோட்டிற்கு மேற்காக ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கும் நீரின் அளவானது 500 ஏக்கர் அடி நீரில் இருந்து 300 ஏக்கர் அடி நீராகக் குறைந்து செல்வதையும் கோட்டிற்கு கிழக்காக முல்லைத்தீவு, கொக்கிளாய்ப் பிரதேசம் வரை 500 முதல் 650 ஏக்கர் அடியாக அதிகரித்துச் செல்வதையும் படம் காட்டுகின்றது. கிழக்கு மாகாணத்தில் ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கும் நீரின் ஆண்டுச் சராசரி அளவு 1000 முதல் 1500 ஏக்கர் அடியாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இதிலிருந்து வடமாகாணத்தை வடகிழக்கு மாகாணம் நீர்வளம் அதிகம் கொண்ட பிரதேசமாக அமைந்துள்ளதைக் காணலாம். இவ்வாறு பெறக்கூடிய நீரின் அளவும், பல்வேறு விதமாக இழக்கப்படும் நீரின் அளவும் கணிக்கப்படின், தேக்கிப் பயனபடுத்தத்தக்க நீர்வளத்தின் அளவை மதிப்பிட்டு பாசனத்தை அபிவிருத்தி செய்தல் இலகுவானதாகும்.
பொதுவாக தமிழர் பாரம்பரியப் பிரதேசம் பாசன அபிவிருத்திக்கு உள்ளார்ந்த நீர் வளங்களைப் பெருமளவு கொண்டுள்ளது. இவ்வடிகால் வளங்களில் சிலவற்றிலேயே நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் அபிவிருத்தியை வேண்டியிருக்கும் சிறு, நடுத்தரக் குளங்கள் தவிர பாரிய குளங்களின் எண்ணிக்கை வட மாகாணத்தில் 10 ஆகவும், கிழக்கு மாகாணத்தில் 15 ஆகவும் அமைந்துள்ளது. இப்பாரிய குளங்களில் பல இன்னும் பெருப்பிக்கக் கூடியனவாயும் பல குளங்கள் ஒன்றுடன் ஒன்றை இணைந்து நீர் கொள்ளளவை அதிகரிக்கக்கூடிய அமைப்புக்களுடனும் காணப்படுகின்றன. இவ் இணைப்பானது ஒரு வடிகாலுடன் இன்னோர் வடிகால் இணைக்கும் வகையிலும் அமைக்கப்படலாம். இப்பிரதேசத்தின் தரைத்தோற்றம் பரந்த தாழ்நிலத்தையும் அலைவடிவான தரைத்தோற்ற அமைப்பினையும் கொண்டுள்ளதால் இங்கு இவ்வாறான அபிவிருத்திக்குரிய வாய்ப்புகள் உள்ளன.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியிலேயே எதிர்காலத்தில் விவசாய அபிவிருத்தி செய்யக்கூடிய உள்ளார்ந்த வாய்ப்புகள் நிறைய உண்டு. இங்கு இரு வழிகளில் விவசாய அபிவிருத்தியை முன்னெடுக்கலாம்.
01) ஏலவேயுள்ள விளை நிலங்களில் விளைவை அதிகரித்தல்
02) புதிய நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல்
ஏலவேயுள்ள விளைநிலங்களின் விளைவை அதிகரிப்பதற்கு பசுமைப்புரட்சி அளித்த நவீன விவசாய அபிவிருத்தி செய்முறையினை நல்ல முறையில் பரவச் செய்தல் வேண்டும் நவீன விவசாய முறைகள் வெற்றியளிக்க வேண்டுமாயின் பாசன வசதி பெறத்தக்க நிலங்களாக விளைநிலங்கள் மாற்றப்படுதல் அவசியம். புதிய உயர் விளைச்சல் தரும் நெல்லினங்களின் அக்கறையான விஞ்ஞானப+ர்வமான முறையிலான கவனிப்புகளுக்கு பாசன வசதியுடன் கூடிய நிலங்களே அவசியமானவை.
விளைவை அதிகரிப்பதற்கு இன்னோர் வழி வருடத்தில் இரண்டு அல்லது மூன்று போகங்கள் நெற்செய்கை மேற்கொள்வதாகும். இது நீர்ப்பாசன வசதிகள் அதிகரிக்கப்பட்டால் சாத்தியமாகும். பெரும்போகம், சிறு போகம், இடைப்போகம் என வருடத்தில் மூன்று போகங்கள் நெற்பயிர் செய்து இப்பகுதியில் பலர் வெற்றி கண்டுள்ளனர்.
புதிய நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்குரிய நிலவளம் யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நிறையவே உண்டு. ஒரு நாட்டின் மொத்த நிலத்தில் 25 வீதம் காடாக இருக்கவேண்டும் என்ற கருத்தை மனதிற் கொண்டு திட்டமிட்ட முறையில் புதிய விவசாய குடியேற்றத்திட்டங்களை இப் பகுதிகளில் ஏற்படுத்தலாம். ஏலவேயுள்ள குடியேற்றத்திட்டப் பகுதிகளை விஸ்தரித்தலிலும் சாத்தியமே. இந் நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசன வசதிகளைத் திட்டமிட்ட முறையில் விருத்தி செய்தல் வேண்டும். இப்பிரதேசத்தில் ஏலவே அபிவிருத்தி செய்யப்பட்ட நீர்ப்பாசனக்குளங்களின் கொள்ளளவை அதிகரிப்பதன் மூலமும், வடிநிலத்திலுள்ள பாரிய, நடுத்தர, சிறு குளங்களை இணைப்பதன் மூலமும், முடிந்தால் வடிநிலத் திசைதிருப்பத்தை ஏற்படுத்துவதன் மூலமும் நீர்ப்பாசன வளங்களை அதிகரித்து விவசாய நிலப்பரப்புகளை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலும் இங்குள்ள 60 வடிநிலங்களில் சிலவே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளன. பல பயனபடுத்தக்கூடிய உள்ளார்ந்த வளங்களைக் கொண்டுள்ளன.
எடுத்துக்காட்டாக வவுனியாவில் ஊற்றெடுத்து மன்னார் இலுப்பைக் கடவையில் சங்கமமாகும் பறங்கியாறு இதுவரை பாசன வசதிக்காக  முறையாகப் பயனபடுத்தப்படவில்லை. இவ் வடிநிலத்தில் இரணைமடு நீர்த்தேக்கம் போன்ற பாரிய இன்னோர் நீர்த்தேக்கத்தை அமைக்கலாம் என நீர்ப்பாசனவியலாளர்கள் கருத்துகின்றனர். இதுபோன்றே வவுனிக்குளத்திட்டத்தின் கீழ் உள்ள பாலியாற்றிலும் இன்னோர் நீர்த்தேக்கத்தை அமைக்கலாம் எனவும் கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே தமிழர் பாரம்பரியப் பிரதேச பிரதான நிலப்பகுதியில் முறையான திட்டமிடல் நடவடிக்கைகள் மூலம் பாரம்பரிய நீர்ப்பாசனத் திட்டங்களை அமைத்து விவசாய அபிவிருத்தி செய்தல் சாத்தியமே.
தரைக்கீழ் நீர்வளம்
தரைக்கீழ் நீர்வளம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மனித வாழ்வுக்கும் வளத்திற்கும் வரலாற்றுக்காலம் முதல் அடிப்படையாக இருந்து வருகின்றது. வட மாகாணத்தின் மொத்தக் குடித்தொகையில் 70 வீதத்தினர் யாழ்.குடாநாட்டில் செறிந்திருப்பதற்கும் குடாநாடு செறிந்த பயிர்ச்செய்கைப் பிரதேசமாக விளங்குவதற்கும் இங்கு கிடைக்கும் தரைக்கீழ் நீர்வளமே காரணமாகும்.
புத்தளத்தில் இருந்து பரந்தன், முல்லைத்தீவை இணைத்து வரையப்படும் கோட்டிற்கு வடமேற்காகவுள்ள பகுதிகள் மயோசின்காலச் சுண்ணாம்பு பாறையமைப்பைக் கொண்டுள்ளன. இப்படிவுகள் தரைக்கீழ் நீரைப் பெருமளவு சேமித்து வைக்கக் கூடிய தன்மை வாய்ந்தவையாகும். சுண்ணக்கல்லை அடிப்படையாகக் கொண்ட செம்மண், செம்மஞ்சள் மண்கள் நீரை உட்புகவிடும் இயல்பை அதிகளவு கொண்டவையாகவும் அமைந்துள்ளன. மழையால் பெறப்படும் நீர் இப்பகுதிகளில் இலகுவாக உட்புகுந்து தரைக்கீழ் நீராகத் தேங்குகின்றது. உண்மையில் இவ்வாறு செல்லும் நீர் நன்னீர் வில்லையாக உவர்நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கின்றது. குடாநாட்டின் கரையோரப் பகுதிகளிலிருந்து மையப் பகுதியை நோக்கிச் செல்லும் போது இவ் வில்லையின் தடிப்பு அதிகரித்துச் செல்லுகின்றது. ஆகக்கூடிய தடிப்பு 100 அடி முதல் 110 அடி வரை உள்ளது. இந்த வில்லையானது யாழ்ப்பாணக் குடாநாட்டின் நடுவேயுள்ள உவர் நீர் ஏரிகளினால் துண்டுகளாக்கப்பட்டுள்ளன. இந்த உவர்நீர் ஏரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றினால் துண்டுபடும் நன்னீர் வில்லை துண்டுபடாது தொடராக அமையும்.
சுண்ணக்கற் பாறைப் படிவுகள் பிரதான நிலப்பகுதியில் ஆழமாகக் கீழ் பாகத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் ஆழமற்று மேற்பாகப் பகுதியிலும் காணப்படுகின்றன. இதனால் அதிகம் ஆழமற்ற கிணறுகளை தோண்டுவதன் மூலம் யாழ்ப்பாணப் பகுதியில் நீரைப் பயன்பாட்டிற்காக இலகுவாக மேலே கொண்டுவர முடிகின்றது. மாறாக புத்தளம், பரந்தன், முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு தெற்காக உள்ள பிரதான நிலப்பகுதியில் சுண்ணக்கற்படை ஆழமானதாகக் காணப்படுகின்றது. இதனால் இப்பகுதிகளில் அதிக செலவில் குழாய்க் கிணறுகள் அமைத்தே தரைக்கீழ் நீரைப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியும்.
கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் கிணறுகள் தோண்டப்பட்டன. யாழ்ப்பாணத்தில் மனித குடியிருப்பின் வரலாறு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஆரம்பமாகிறது. அக்காலத்தில் இருந்தே கிணறுகள் தோண்டி தரைக்கீழ் நீரைக் குடிப்பதற்காகவும், விவசாயத்திற்காகவும் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளமைக்கான சான்றுகள் நிறைய உண்டு. கிணறுகளில் இருந்து மனித சக்தியால் குறிப்பாக துலா மூலமும், உள்ளுர் சூத்திர முறையாலும் நீரானது பாசனத்திற்குப் பெறப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு வளர்ச்சியடைந்துள்ள பாசன முறையிலான விவசாயச் செய்கை பிற்பட்ட கால கட்டங்களில் உப உணவுச் செய்கை எனும் சிறப்பானதும் செறிவானதும் நவீனத்துவமானதுமான பயிர்ச்செய்கை முறையாக மாறிய பின்னர் நீர் இறைக்கும் இயந்திரத்தின் பாவனை யாழ் குடாநாட்டின் சகல கிராமங்களிலும் அதிகரித்து வந்துள்ளது.
இவற்றினால் அண்மைக் காலங்களில் குடாநாட்டின் பல பகுதிகளில் தரைக்கீழ்நீர் உவர்நீராதல் போன்ற பிரச்சனைகள் தோன்றியுள்ளன. இது அபாயகரமானதோர் நிலைமை என்பதில் சந்தேகமில்லை. இச்சவாலை நல்லமுறையில் எதிர்கொள்வதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளார்ந்த தரைக்கீழ் நீர்வளம், அதன் பாவனை, அவற்றின் முகாமைத்துவம், அபிவிருத்தி என்பவைகள் பற்றி நுண்ணாய்வுகள் பல செய்யப்படுதல் வேண்டும். 1965 இல் இங்கு அமைக்கப்பட்ட நீர்வளசபை வடபகுதி தரைக்கீழ் நீர் உவர் நீராதல் பற்றியும் குழாய்க்கிணறு தோண்டி பாசன விருத்தி செய்யும் வாய்ப்புகள் பற்றியும் சில ஆய்வுகளை மேற்கொண்ட போதிலும் இன்றுவரை அவை முறையாக வெளியிடப்படவில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர்வளம் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் முன்னெப்போதுமி;ல்லாதவாறு இன்றைய காலகட்டத்தில் மிக அக்கறையுடன் சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம். திட்டமிட்ட முறையில் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டிய தேவையும் உண்டு. மேல் விபரித்த அம்சங்கள் அனைத்தையும் மனங்கொண்டு நாம் செய்ய வேண்டிய பணிகள், ஆலோசனைகள் என்பன இங்கு அனைவரதும் அக்கறையான கவனத்திற்கு முன்வைக்கப்படுகிறது.
சில அபிவிருத்தி ஆலோசனைகள்
யாழ்ப்பாணத்தில் விவசாயமும் நீர்ப்பாசனமும் எனும் போது அவற்றின் அபிவிருத்தி அம்சமே முன்னுரிமை பெறுகின்றது. யாழ்ப்பாணக்குடாநாட்டில், இனிமேலும் நாம் விவசாய விரிவாக்கத்தை: முக்கியமாக விளைபரப்பை அதிகரித்து மேற்கொள்ள வேண்டுமென்று எண்ணுவது தவறாகும். இது “உள்ளதையும் கெடுக்கும்” ஆபத்தான நிலையை உருவாக்கக் கூடும். இங்கு தற்போது காணப்படும் விவசாயச் செய்கையை மிகவும் நவீன முறையிலானதாக மாற்றுவதோடு நீர்ப்பாசன முறைகளிலும் நவீனத்துவத்தை கையாண்டு நல்ல முறையில் பாசன முகாமைத்துவத்தைப்  பேணி வீண் விரயமாதலைத் தடுத்து ஏலவே உள்ள விவசாய நிலப்பயன்பாட்டை உச்ச வருமானம் தரத்தக்கதாக மாற்றி அமைப்பதே சிறந்த வழியாகும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலப்பயன்பாடு சிறப்புத்தேர்ச்சி பெற்றதாக மாற்றப்பட வேண்டும். அதிக செலவில் விவசாயம் செய்யும் இப்பகுதியில் ஒவ்வொரு அங்குல நிலமும் உச்ச பயன் தரத்தக்கதாக அமைதல் வேண்டும். விவசாய அபிவிருத்தி விவசாய வர்த்தக முறையிலமைந்ததாக அமையப்பெற வேண்டும். யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதிகளில் நெற்பயிர்ச்செய்கை தவிர்க்கப்பட்டு அதிக வருமானம் தரத்தக்க பணப்பயிர்ச்செய்கை விருத்தி செய்யப்பட வேண்டும். உப உணவு, காய்கறி, பழச்செய்கை, பானப்பயிர் செய்கை, எண்ணை வித்துப் பயிரச்;செய்கை போன்றனவாக இவை அமைய வேண்டும். உற்பத்திகளில் சில விவசாய கைத்தொழில்துறை விருத்திக்கு மூலப்பொருள்களை வழங்குபவையாகவும் இருக்கவேண்டும். உண்மையில் இப்பகுதியில் புகையிலை செய்கை, காய்கறி செய்கை, திராட்சைப் பழச்செய்கை என்பன ஊக்குவிக்கப்படுதல் வேண்டும். ஏனெனில் இவை செய்கையாளருக்கு குறைந்த நிலத்தில், குறைந்த நீர் வளத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் தருவதோடு விவசாய கைத்தொழில் விரிவாக்கத்திற்;கும்  உதவுவதாகும். தேயிலை, இறப்பர் ஏற்றுமதியில் இலங்கை அந்நியச்செலாவணி பெறுவது போல் நாம் இவற்றால் அந்நியச்செலாவணியை பெறலாம்.
நகரங்களைச் சூழவுள்ள கிராமப் பகுதிகளில் விவசாயச் செய்கை நகரச் சந்தையின் தேவைக்குரியவற்றை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தப்படுதல் வேண்டும். சந்தை நிலமைக்கேற்பவும் யாழ்ப்பாண விவசாயம் மாற்றமுறுதல் வேண்டும். இவ்வகையான நிலப்பயன்பாட்டு மாற்றமே யாழ்ப்பாண பகுதியில் வேண்டப்படுவதாகும்
மழை நீரை தேக்குதலும் குளங்களின் தூர் அகற்றுவதும்.
யாழ்ப்பாணக் குடாநாடு தரைக்கீழ் நீரின் மீள்நிரப்பும் தன்மையை அதிகரிக்க வேண்டும் என்பதில் பலர் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். இங்கு குறுகிய காலத்திற் கிடைக்கப்பெறும் ஒரே ஒரு மீள் நிரப்பியான மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீரை மேற்பரப்பில் ஓடி வீணே கடலை சென்றடைய விடாது தடுத்து அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப்பதற்கு சகல வழிகளிலும் நாம் முயலுதல் வேண்டும். யாழ்ப்பாணக் குடிhநாட்டின் சுண்ணக்கற் புவியமைப்பின் காரணமாக சுண்ணக்கற் கரைசலால் ஏற்பட்ட 1050 குளங்கள் காணப்படுகின்றன. இக்குளங்களில் நிறையும் தண்ணீரில் பெரும்பகுதி தரையின் கீழ்ச் சென்று நீர்வளத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இவ்வாறான குளங்கள் குப்பை, கூழங்கள் கொட்டப்படுவதாலும் தூர் சேர்ந்தமையாலும் நீரினை உட்செலுத்தும் தன்மையில் குறைவடைந்து காணப்படுகின்றன. இவ்வாறான குளங்களைத் துப்புரவு செய்தலும் தூர் அகற்றுதலும் அவசியம.; இங்கு இவ்வறான முயற்சிகள் அரிதாகவே இடம்பெறுகின்றன.
தோட்டங்களை இணக்குவதற்கு குளங்களின் மண், மக்கி, எடுக்க அனுமதிக்கும் முறை இங்கு உண்டு. இதில் மிக்க அவதானம் தேவை. குளங்களைத் தரைக்கீழ் நீர்ப்பீடம் வெளித்தெரியக் கூடியளவிற்கு ஆழமாக்க விடுதல் கூடாது. இவ்வாறு நிகழின் குளங்கள் மூலம் தரைக்கீழ் நீர் பெருமளவு ஆவியாக வெளியேறிவிடும். எனவே குறிப்பிட்ட ஆழம் வரையே மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில பகுதிகளில் சுண்ணக்கல் நிலத்தோற்றத்தில் ஒன்றாக தரைக்கீழ் நீர் ஓடும். குகைகள் சில மேற்பரப்பு இடிந்த நிலையில் காணப்படுகின்றன. நிலாவரைக்கிணறு, குரும்பசிட்டி பேய்க்கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, கீரிமலைக் கேணி, அல்வாய் மாயக்கைக் குளம், கரவெட்டி குளக்கிணறு, ஊறணிக்கிணறுகள், யமுனா ஏரி என்பன இவ்வகையில் அமைந்த குகைப் பள்ளங்கள் ஆகும். இவற்றில் சில பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் சில ஆய்வுகள் மேற்கொண்ட பின் பயன்படுத்தத்தக்க வாய்ப்புகளைக் கொண்டுள்ளன.
நிலாவரைக்கிணற்றில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி நாள் ஒன்றிற்கு  10 மணித்தியாலங்களில் 30,000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை தெரிய வந்தது. இவற்றைப் பாசனத்திற்காக மாத்திரமன்றி, மழைக்காலங்களில் பெருமளவு நீரைத் திட்டமிட்ட அடிப்படையில் தரைக்கீழ்நீர் மீள் நிரப்பியாக உட்செலுத்துவதற்கும் பயன்படுத்த இயலும். இது இப்பகுதிகளின் தரைக்கீழ் நீர்வளத்தை பெரிதும் அதிகரிக்கக்கூடியதாக அமையும் என துணியலாம்.
தரைக்கீழ் நீர் குகைவழிகள் மூலம் நீரானது கடலைச் சென்றடையும் நிலையும் இங்கு காணப்படுகின்றது. கீரிமலைக் கேணிக்கு குகை ஊடாக வரும்  நீர் இதற்கு உதாரணம் ஆகும். தரைக்கீழ் நீரைக் கடலில் கலக்க வைக்கும் குகை வழிகள் எல்லாப் பகுதிகளிலும் கண்டறியப்பட்டு அவற்றை நிலத்தின் கீழாக அணைகட்டித் தடுக்கவேண்டும். இவ்வாறான முயற்சிக்கான ஆலோசனைகள் ஏலவே முன்வைக்கப்பட்டிருப்பினும் செயல்முறையில் இவ்வகை முயற்சிகள் ஒன்றும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
நன்னீர் ஏரித்திட்டம்
யாழ்ப்பாணக் குடாநாட்டின் எதிர்கால வாழ்வுக்கும் வளத்திற்கும் இன்றியமையாத திட்டம் பற்றி அக்கறையுடன் நோக்கும் எவரும் இங்குள்ள கடல் நீரேரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றும் திட்டம் பற்றிச்  சிந்திக்காதிருக்க முடியாது. நன்னீரேரித் திட்டங்களால் யாழ்ப்பாணத்தின் தரைக்கீழ் நீர்வள சேமிப்பு அதிகரிப்பதோடு வீணே கடலை அடையும் நீர் தரைக்கீழ் நீரின் மீள் நிரம்பியாக மாறும். குடாநாட்டுத் தரைக்கீழ் நீர் வில்லைகள் துண்டுபடாது தொடராகவே இருக்கும். குடாநாட்டின் உவர்நீராதல் பிரச்சனைகள் கணிசமான அளவு குறையும். உவர் நிலங்கள் வளமுள்ள விளை நிலங்களாக மாறும். குடாநாட்டின் நிலப்பரப்பும் நன்னீர் பரப்பும் அதிகரிக்கும். இவ்வாறு பல நன்மைகள் நன்னீர் ஏரியாக்கும் திட்டம் எமக்கு வழங்குமெனத் துணியலாம். உண்மையில் இப்பகுதிக் கடல்நீரேரிகளை  நன்னீரேரியாக்கும் திட்டம் பற்றிய சிந்தனை நூறு வருடம் பழமை வாய்ந்தது. 1922இல் இரணைமடுக் குளத்தேக்கம் பாரிய அணை கட்டி உருவாக்கப்பட்டபோது ஆனையிறவுக் கடல் நீரேரியை நன்னீரேரியாக்கும் திட்டம் பற்றியும் கூறப்பட்டிருந்தமை மனங்கொள்ளத்தக்கது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் நன்னீரேரிகளாக மாற்றப்படக்கூடிய 13 கடனீரேரிகளும் நடைமுறையிலுள்ள 33 உவர்நீர்த்தடுப்புத் திட்டங்களும் உள்ளன. மேற்படி 13 கடனீரேரிகளில் நான்கு கடனீரேரிகளை அதிக செலவின்றி நன்னீரேரிகளாக மாற்றமுடியும். அவையாவன.
01) ஆனையிறவு மேற்கு கடனீரேரி
02) ஆனையிறவு கிழக்கு கடனீரேரி
03) உப்பாறு மற்றும் தொண்டைமானாறு கடனீரேரி
மேற்படி கடனீரேரிகளை நன்னீரேரிகளாக  மாற்றும் திட்டங்கள் பல உருவாக்கப்பட்டு அவற்றில் சில பகுதிகள் செயற்படுத்தப்பட்டுமுள்ளன. உப்புநீர் மீன்பிடிக்கு உதவுமென்று எண்ணும் மக்கள் ஏதோ வழிகளில் கடல்நீரை உள்ளே வர விடுவதனால் இத்திட்டங்கள் பூரண வெற்றியை அளிக்காதுள்ளன. இத் திட்டங்களை நல்ல முறையில் செயற்படுத்துதல் இன்றியமையாததாகும். அத்துடன் குடாநாட்டைச் சூழவுள்ள ஏனைய சில கடனீரேரிகளையும் அதிக பொருள் செலவின்றி நன்னீரேரியாகக் கூடிய வாய்ப்பு உண்டு. உதாரணமாக மண்டை தீவையும் வேலணையையும் பிரிக்கும் கடனீரேரியை சுலபமாக நன்னீரேரியாக மாற்றலாம். மற்றும் பண்ணைத் தாம்போதியையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலம் யாழ்.நகரத்தின் தென்மேற்குப் பகுதியில் பாரிய நன்னீரேரித் தேக்கத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறான திட்டங்களால் நன்னீர் வளம் பெருகுவதோடு நிலப்பரப்புகளில் உவர்த்தன்மை நீக்கப்பட்டு அவற்றை வளமான விளைநிலங்களாக மாற்றமுடியும். இது நில, நீர் பற்றாக்குறையால் அல்லல்படும் யாழ்ப்பாணத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையுமெனலாம்.
கடல் நீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் முக்கியமாக இரு பிரச்சினைகளை முன்வைக்கின்றனர்.
01) சூழல் மாசடைதல் தொடர்பானது
கடல் நீரேரிகளில் நீர்வரத்து தடைப்பட்டு நீரேரிகள் முற்றாக வற்றும் காலங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீது வேகமாக வீசும் காற்றினால் (சோழக்காற்று) புழுதி வாரி வீசப்படுமென்றும் இதனால் இத்திட்டம் சுற்றுப்புறச் சூழல்மாசடையும் அபாயத்தை கொண்டுள்ளதெனவும் சுட்டிக்காட்டுகின்றார்கள். இந்த அபாயத்தை இலகுவாக சமாளிக்கலாம். நன்னீரை வற்றாத அளவுக்கு தேக்கி வைப்பதன் மூலமாகவும் முற்றாக நீர்வற்றும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் திட்டமிட்ட அடிப்படையில் புல் வளர்ப்பதன் மூலமாகவும் இம் மாசடைதல் பிரச்சனையைச் சமாளிக்கலாம். ஒல்லாந்து தேசத்தில் கடல் நீரேரிப் பரப்புகள் பெருமளவு மீட்கப்பட்டு புல் வளர்ப்பிற்கு உட்படுத்தப்பட்டு விலங்கு வேளாண்மை விருத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
02) கடல் நீரேரிகளில்  மீன்பிடித் தொழில் மேற்கொள்ளும் மக்களின் தொழிற்துறை பாதிப்புறும் என்ற கருத்து
இத்திட்டத்தால் பாதிப்புறும் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பொருத்தமான வேறு கரையோரப்பகுதிகளில் குடியிருப்புகளை அமைத்துக் கொடுப்பது இயலக்கூடியதே. குடாநாட்டு பரவைக் கடற்பரப்புகளில் மீன்பிடித் தொழில் ஈடுபடுவதைவிட ஆழ்கடல் மீன்பிடியில் அவர்களை ஈடுபட வைப்பது பொருளாதார அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை விளைவிப்பதாக அமையும். எனவே பாதிப்புறும் மக்களை குடாநாட்டின் அல்லது பிரதான நிலப்பகுதியின் கிழக்கு கரையோரமாகக் குடியேற்றி ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்கலாம். இம்மாற்றமானது குறுங்கால நோக்கில் கடினமாக அமைந்தாலும் நீண்ட கால பிரதேச அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை பயக்குமென நம்பலாம்.
பயிர்களுக்கு மிதமிஞ்சிய நீர்ப்பாவனை
யாழ்ப்பாணப் பகுதிகளில்  நீரிறைப்பு இயந்திரமயப்படுத்தப்பட்ட பின்னர் பயிர்களுக்கு மிதமிஞ்சிய நீர் பாய்ச்சப்படுவதாக கருதப்படுகின்றது. உவர்நீராதல் பிரச்சனைக்கு இதுவும் ஒரு காரணமாகும். உண்மையில் இன்ன பயிருக்கு இன்ன பிரதேசத்தில் இன்ன காலத்திற்கு இவ்வளவு நீர் தேவை என்பதை விவசாயிகளுக்கு நல்ல முறையில் அறிவுறுத்தல் வேண்டும். மேலும் இங்கு காணப்படும் பாசன முறைமை நீர் ஆவியாக்கத்தைக் அதிகரிக்கச்செய்கின்றது. இதனை தடுப்பதற்கு இஸ்ரேல் நாட்டில் காணப்படும் பாசன முறைகளான விசிறல் பாசன முறைமை, பல குழாய் வழி இணைப்புகள் மூலம் பயிருக்கு அடியில் நீரைச் செலுத்துதல், ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பை தடுப்பதற்கு சில இரசாயணங்களை நீரில் மிதக்கவிடல் போன்ற முறைகளைப் பின்பற்றி ஒருதுளி நீரும் வீணாகாமல் பாசன முகாமைத்துவ முறைகளை மக்கள் பின்பற்றும்படி செய்தல் வேண்டும்.
நீர்வள அபிவிருத்தி தொடர்பான திட்டமிடலுக்கு பல்வேறு தரவுகள் தேவை. இதற்கு புவியியல், பொருளியல், புவிச்சரிதவியல், மண்ணியல், பொறியியல், விவசாய அறிவயல் போன்ற துறை சார் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பாக இயங்க வேண்டும். தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் நீர்வள நிலையங்களாக முதலில் வகுக்கப்படுதல் வேண்டும். ஆறுகள், குளங்கள், கிணறுகள் என்பவற்றை அவதானித்து நீர்ப்பீட ஆய்வு செய்து அவற்றின் உவர்த்தன்மை, ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பு, ஊடுவடித்தல், போன்ற அம்சங்கள் யாவும் கணிக்கப்பட்டு நீர் வள வலயங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படைத் தரவுகளின் துணையுடனேயே அபிவிருத்தித் திட்டங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும். இந்த அடிப்படைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் வெற்றி பெறுமென நம்பலாம்.
பிரதான நிலப்பகுதி நீர்வள ஆய்வுகள் இன்னும் சரியாக ஆராயப்படவில்லை. இப்பகுதிக் காடுகளிலே பழைய குளங்கள் பல தூர்ந்த நிலையில் காணப்படுகின்றன. இவை புனருத்தாரணம் செய்யப்படுதல் வேண்டும். பயன்பாட்டிலுள்ள குளங்களின் கொள்ளளவைக் கூட்டலாம். தெளிவான ஆய்வுகள் மேற்கொண்டு சூழல் நிலமைகள் பாதிக்கப்படாதவகையில் புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கலாம். 1980-81 இல் கனகாம்பிகைக் குளம், பிரமந்தலாறு, புதுமுறிப்புக் குளம், போன்றவற்றின் கொள்ளளவை அதிகரிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. பறங்கியாறு, பாலியாறு, என்பவற்றைப் பொருத்தமான இடத்தில் மறித்துக் கட்டி புதிய நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்கக்கூடிய வளவாய்ப்புகள் பற்றி நீரியலாளர்களால் ஆராயப்பட்டுள்ளது.
பிரதான நிலப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குளங்களில் ஏற்று நீர்ப்பாசன வளங்களை அதிகரிப்பதன் மூலம் அங்கு உபஉணவுச் செய்கையை ஊக்குவிக்கலாம். வடபகுதிக் குடியேற்றத் திட்டங்களில் ஏற்று நீர்ப்பாசன வசதிகளுடன் உப உணவு உற்பத்திக்கு முதலிடம் வழங்கிய இளைஞர் திட்டங்களே பெருமளவுக்கு வெற்றியைத் தந்த திட்டங்களாக உள. (உ.ம் முத்தையன் கட்டு, விசுவமடு, வவுனிக்குளம்) இவ்வாறான ஏற்று நீர்ப்பாசன திட்டங்களில் பணப்பயிர் செய்கைகளே ஊக்குவிக்கப்படுதல் வேண்டும்.  ஏற்று பாசனமுறை அதிக செலவிலமைக்கப்படுவதால் பணப்பயிர்ச் செய்கையே அதிக வருமானத்தை தரத்தக்கதாக அமையும்.
முடிவுரை
தமிழரின் பாரம்பரியப் பிரதேச நீர்வள அபிவிருத்தியை எமக்கு வேண்டுவதான அபிவிருத்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் இவ்வள அபிவிருத்தி தொடர்பான கொள்கைகள், திட்டங்களை உருவாக்குவதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் அப்பிரதேசங்கள் அவ்வப் பகுதி வாழ் மக்களின் நிர்வாகத்தினுள் வருதல் வேண்டும். அப்போது தான் தங்கு தடையின்றி உள்நோக்கம் எதுவும் அற்ற விவசாய பாசனஅபிவிருத்தி திட்டங்களை உருவாக்கலாம். இதனால் விவசாய உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெறுவது மாத்திரமன்றி மிகை உற்பத்தி செய்தலும் சாத்தியமாகும்.
http://keetru.com/index.php/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/13282-2011-03-01-05-49-40