Sunday, January 1, 2017

கட்டடக் கலை நிபுணராக என்ன படிக்க வேண்டும்?

உலகமயமாக்கலால் கிராமங்கள் கூட நகரங்களாக உருவெடுத்து வருகிறது. எல்லாத் துறைகளும் வளர்ச்சிப் பெற்று வருகிறது. அடித்தட்டு மக்கள் கூட தற்போது சொந்த வீடு கட்டும் காலம் இது. எங்கு பார்த்தாலும், கட்டங்கள், நகரங்கள், வீதிகள் என்று புதிது புதிதாக கட்டமைப்புகள் பெருகி வருகின்றன. வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் அந்தக் காலக்கட்டத்தில் கட்டடக் கலை நிபுணர்களின் தேவை அதிகமாகவே இருக்கும். எனவே பிளஸ் டூ படித்துவிட்டு என்னப் படிக்கலாம் என்று நினைக்கும் மாணவர்களுக்கு, ஆர்க்கிடெக்சர் படிப்பு சிறந்த ஒரு தேர்வாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஒரு தொழில்நுட்பம் மற்றும் வியாபாரம் சார்ந்த விஷயங்களுக்கு ஒரு அமைப்பை அமைத்துக்கொடுத்தல், அப்பார்ட்மெண்ட், மிகப்பெரும் கட்டடம், பள்ளிகள், ஆலயங்கள், ஆலைகள், வீடு மற்றும் விமானநிலையங்கள், கல்லூரி வளாகங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள் இவைகளை வடிவமைப்பதில் ஆர்க்கீடெக்சர் பணி மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

கட்டட வடிவமைப்பு மட்டுமல்லாமல், தற்போது வாடிக்கையாளர்களின் சந்தேகங்களை தீர்ப்பது, மேற்பார்வையிடுதல் ஒரு கட்டடம் கட்டுவதற்கு ஆகும் செலவுத் தொகைகளை முன்கூட்டியே கணக்கிடுவது, ஒரு திட்டத்தை எவ்வளவு நாளைக்குள் முடிக்க முடியும் என்று தீர்மானிப்பது, ஒரு கட்டடத்திற்கான வரைபடத்தை இறுதி செய்வது இவை எல்லாமே ஆர்க்கிடெக்சரின் பணிகள்தான்.
ஆர்க்கிடெக்சர் படிப்பில் கிரீன் ஆர்க்கிடெக்சர், லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர், மியூசியம் ஆர்க்கிடெக்சர், நேவல் ஆர்க்கிடெக்சர், தியேட்டர் ஆர்க்கிடெக்சர் என்று பல்வேறு பிரிவுகள் உள்ளன.
கிரீன் ஆர்க்கிடெக்சர் எனப்படும், பசுமை கட்டடக்கலை என்று புதிதாக ஒரு துறை உருவெடுத்து வருகிறது. அதாவது சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் ஒரு கட்டடத்தை எப்படி வடிவமைக்கலாம் என்பது குறித்த பிரிவுதான் கிரீன் ஆர்க்கிடெக்சர். புவிவெப்பமயமாதல்,சு ற்றுப்புறச் சூழல் மாபடுதல் என்று முக்கியப் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் இந்தப் படிப்பு இருக்கும். எதிர்காலத்தில் இந்தப் படிப்புக்கு பெரும் வரவேற்பு இருக்கும். இதேபோல திரையரங்க கட்டடக்கலை, கப்பல்கட்டுதல்  உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் படிக்கலாம்.

இதுமட்டுமல்லாமல் ஆர்க்கிடெக்சர் படிப்பில் பல்வேறு சிறப்பு உட்பிரிவுகளும் இருக்கின்றன. அந்த வகையில் பார்த்தால், டிசைனிங், உற்பத்தி வரைபடம், கிராமப்புறம் மற்றும் பிராந்தியப் பகுதிகள் வடிவமைப்பில் திட்டமிடல், மாதிரி உருவாக்கம், ரியல் எஸ்டேட் மற்றும் நில மேம்பாடு, கட்டடக்கலை பத்திரிகையியல் உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பிரிவுகளின் கீழ் மாணவர்கள் ஆர்க்கிடெக்சர் படிப்புகளை படிக்க முடியும்.

ஆர்க்கிடெக்சர் படிப்பை பொறுத்தவரை மாணவர்கள் பி.ஆர்க். இளநிலைப் பட்டப் படிப்பில் சேரலாம். இந்த ஐந்தாண்டு பட்டப் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்கவேண்டும். தேசிய அளவிலான கல்வி நிலையங்களில் ஆர்க்கிடெக்சர் படிப்பில் சேர வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள், சி.பி.எஸ்.இ. நடத்தும் ஆல் இந்தியா என்ஜினீயரிங் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். அல்லது ஆர்க்கிடெக்சர் படிப்புக்காக நடத்தப்படும் நேஷனல் ஆப்டிட்யூட் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இந்தப் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் புதுமையான படைப்புகளை விரும்புபவர்களாகவும், ஓரளவிற்கு ஓவியத் திறமையும் கொண்டவர்களாக இருந்தால், இந்தத் துறையில் பெரிய அளவில் சாதிக்க முடியும். பட்டப் படிப்பு முடிக்கும் மாணவர்கள் எம்.ஆர்க். முதுநிலைப் பட்டப் படிப்பையும் அதைத்தொடர்ந்து பி.எச்டி படிப்பையும் படிக்க முடியும்.

கட்டடக் கலையில் பட்டப் படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு, மத்திய மற்றும் மாநில பொதுப்பணித்துறை நிறுவனங்கள், ரயில்வே துறை, நேஷனல் பில்டிங் நிறுவனம், நகர கட்டமைப்பு நிறுவனங்கள், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அர்பன் அஃபயர்ஸ் அண்ட் ஹவுசிங் அண்ட் அர்பன் டெவலப்மண்ட் கார்ப்பரேஷனில் பில்டிங் இன்ஸ்பெக்டர், பில்டிங் கண்ட்ரோல் ஆபீசர், ஆர்க்கிடெக்சர் புகைப்பட கலைஞர், ஆசிரியர் பணி  மற்றும் சொந்தமாக கன்சல்டிங் நிறுவனமும் நடத்த முடியும்.

பி.ஆர்க். படிப்பை நாட்டில் உள்ள பல்வேறு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையங்கள், பீகார் மற்றும் ஹரியானாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, ராஜஸ்தானில் உள்ள பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்வி நிலையம், சண்டீகரில் உள்ள பஞ்சாப் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் பனராஸில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி போன்ற புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் பி.ஆர்க். கல்வி கற்கும் மாணவர்களுக்கு படித்து முடித்தவுடன் உடனடியாக பணிவாய்ப்பு கிடைக்கிறது. இதுதவிர நாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்கள், பொறியியல் கல்லூரிகளில் பி.ஆர்க். பட்டப் படிப்பு படிக்க முடியும்.
கட்டடக் கலை தொடர்பான இளநிலைப் பட்டப் படிப்புகள்:

பி.ஆர்க். (பில்டிங் அண்ட் கன்சல்டிங் மேனேஜ்மெண்ட்), பி.ஆர்க்., பி.ஆர்க்.(ஆர்க்கிடெக்சர் அண்ட் ரீஜினல் பிளானிங்), பி.இ.(கண்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி), பி.டெக்.(அர்பன் அண்ட் ரீனினல் பிளானிங்) உள்ளிட்ட படிப்புகளைப் படிக்கலாம்.

No comments:

Post a Comment