Sunday, January 1, 2017

பார்வையற்றவர்களை மனதில் கொண்டு வடிவமைத்தல்

பார்வையற்றவர்களுக்கான ஒரு நகர வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும்? க்றிஸ் டவுனி ஒரு கட்டிட கலைஞர். திடீரென்று 2008ல் அவர் பார்வை இழந்தார். பார்வை இழந்த பின்பு சான் பிரான்சிஸ்கோவில் அவர் வாழ்ந்ததை பார்வை இருந்த நேரத்தில் நடந்தவைகளோடு ஒப்பிடுகிறார். சிறந்த வடிவமைப்புகள் எப்படி அவரது வாழ்க்கை தரத்தை உயர்த்தியது என்று சொல்கிறார். பார்வை இருக்கிறதோ இல்லையோ சிறந்த வடிவமைப்புகள் எப்படி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்று சொல்கிறார்.

https://s3.amazonaws.com/ted.conferences/talk/transcript/2013Z/None/ChrisDowney_2013Z-transcript.mp4 

  1. அந்த பேருந்தில் இருந்து இறங்கி,
  2. அந்த மூலையை நோக்கி நான் நடக்க ஆரம்பித்தேன்
  3. மேற்கில் இருக்கும் ப்ரைலீ பயிற்சி
    அமர்வுக்கு போகும் வழி அது.
  4. அது 2009 இன் பனிக்காலம்,
  5. கடந்த ஒரு வருடமாக எனக்கு
    கண் பார்வை இல்லை.
  6. எல்லாம் நன்றாக தான்
    சென்று கொண்டிருந்தது.
  7. பாதுகாப்பாக அந்த பக்கம் போன பின்பு,
  8. நான் இடது புறம் திரும்பினேன்,
  9. பாதசாரிகளுக்கான ஓலி எழுப்பும்
    தானியங்கி பொத்தானை அழுத்தினேன்,
  10. எனது முறைக்காக காத்திருந்தேன்.
  11. சத்தம் கேட்ட உடனே நான்
    நடக்க ஆரம்பித்தேன்
  12. பாதுகாப்பாக மறுபுறம் சென்றேன்.
  13. நடைபாதைக்கு மாறினேன்,
  14. அப்பொழுது எனக்கு ஒரு
    இரும்பு நாற்காலியை
  15. சிமெண்ட் நடைபாதையில்
    இழுக்கும் சத்தம் கேட்டது.
  16. அந்த மூலையில் ஒரு உணவகம் இருப்பது எனக்கு தெரியும்,
  17. அங்கு நாற்காலிகள் போட்டிருப்பார்கள் என்பதும் எனக்கு தெரியும்,
  18. அதனால் தெருவின் அருகாமைக்கு செல்வதற்காக
  19. இடது பக்கம் சற்று ஒதுங்கினேன்.
  20. அப்படி நான் செய்த பொழுது நாற்காலியை இழுத்தேன்.
  21. தவறு செய்துவிட்டதை
    நான் உணர்ந்தேன்,
  22. உடன் வலது புறம் சென்றேன்,
  23. அதனால் நாற்காலியை சரியான
    காலத்தில் நிகழுமாறு நகர்த்தினேன்.
  24. நான் இப்பொழுது சற்று
    கவலையுடன் இருந்தேன்.
  25. நான் மீண்டும் இடது புறம் சென்றேன்,
  26. அதற்காக மீண்டும் நாற்காலியை இழுத்தேன்,
  27. அதன் மூலம் என் பாதையை
    நான் தடுத்து கொண்டேன்.
  28. நான் அதிகாரபூர்வமாக மனம்போன போக்கில் திரிந்து கொண்டிருக்கிறேன்.
  29. அதனால் நான் கூச்ச்சலிட்டேன்,
  30. "யார் அங்கு இருப்பது? இங்கு என்ன நடக்கிறது?"
  31. அப்பொழுது எனது சத்தத்திற்கு மேல்
    ஒரு கூச்சல் எனக்கு கேட்டது,
  32. வேறு எதோ ஒன்றும் கேட்டது.
    நன்கு பழகப்பட்ட ஒரு கல கல ஓசை.
  33. அது நன்கு தெரிந்த பழக்கப்பட்ட
    ஓசை போல இருந்தது,
  34. நான் வேகமாக இன்னொரு சாத்திய
    கூறையும் நினைத்து பார்த்தேன்,
  35. நான் எனது இடது கையை நீட்டினேன்,
  36. எனது கை விரல்கள் பஞ்சு
    போன்ற எதையோ தொட்டது,
  37. ஒரு காது எனது
    கைகளில் தட்டுபட்டது,
  38. ஒரு நாயின் காது ,ஒரு வேளை
    கோல்டன் ரிட்ரீவராக இருக்கலாம்.
  39. அதன் நாய்வார் அந்த
    நாற்காலியில் கட்டபட்டிருந்தது
  40. ஏனெனில் அதன் எஜமானர்
    காபி குடிக்க சென்றிருந்தார்,
  41. ஆனால் அது அதன்
    முயற்சியில் உறுதியாக இருந்தது
  42. என்னை வரவேற்பதில் ஒருவேளை அதன் காதை
    நான் சொறிய விரும்பியதோ என்னவோ.
  43. யாருக்கு தெரியும், ஒருவேளை சேவை செய்யும் தன்னார்வத்தை தெரிவித்ததோ என்னவோ.
  44. (சிரிப்பொலி)
  45. ஆனால் உண்மையில் அந்த சின்ன கதை என்னவென்றால்
  46. பயம் மற்றும் தவறான கருத்துக்களை பற்றியது
  47. அதாவது ஒரு நகரத்தில் பார்வ்வையில்லாமல்
  48. நகர்வதை குறித்தது,
  49. சுற்றுப்புறசூழலையும்
  50. சுற்றியுள்ள மனிதர்களையும்
    பற்றி கவலைபடாமல்.
  51. அதனால் நான் சற்று பின் சென்று
    எனது நிலையை பற்றி சொல்கிறேன்.
  52. 2008 புனித பாட்ரிக் தினம் அன்று,
  53. எனது அறுவை சிகிச்சைக்காக
    மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்
  54. எனது மூளை கட்டியையை
    அகற்றுவதற்காக.
  55. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
  56. இரண்டு நாட்கள் கழித்து
    எனது பார்வை குறைய ஆரம்பித்தது.
  57. மூன்றாவது நாளில், முற்றிலுமாக
    பார்வை போய்விட்டது.
  58. உடனே நம்பமுடியாத ஒரு வித
  59. பயம், குழப்பம் காப்பற்றநிலை
    எல்லோருக்கும் நடப்பதை போல,
  60. என்னை தாக்கியது.
  61. ஆனால் எனக்கு சிந்திக்க நிறைய நேரம் இருந்தது,
  62. எனக்கு உண்மை புரிய ஆரம்பித்தது
  63. நான் நிறைய நன்றியுடையவனாக
    இருக்க வேண்டும் என்று.
  64. குறிப்பாக நான் எனது தந்தையை
    பற்றி நினைத்தேன்
  65. மூளை அறுவை சிகிச்சை சிக்கல்களால்
  66. அவர் இறந்து போனார்.
  67. அப்பொழுது அவருக்கு வயது 36,
    எனக்கு 7 வயது
  68. அது ஒரு காரணமாக இருந்தாலும்
  69. நடக்க போவதை குறித்து நான் பயந்ததற்கு
  70. என்ன நடக்கும் என்பதை குறித்து
    ஒரு சிறு துப்பு கூட இல்லாமல் இருந்தது,
  71. நான் உயிருடன் இருந்தேன்.
  72. எனது மகனுக்கு அவனது தந்தை
    இப்பொழுதும் இருக்கிறார்.
  73. மேலும் நான் பார்வை இழந்து விட்டேன்
    என்று சொல்வதற்க்கு
  74. முதல் நபர் இல்லை.
  75. எனக்கு தெரியும் எல்லாவிதமான அமைப்புகளும்
  76. உத்திகளும் பயிற்சிகளும்
  77. ஒரு முழுமையான அரத்தமுள்ள
    சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ
  78. பார்வையில்லாமல்
    வாழ்வதற்கு இருக்கும் என்று.
  79. அதனால் மருத்துவமனையில்
    இருந்து நான் வெளிவந்த பின்பு
  80. சில நாட்கள் கழித்து ஒரு
    குறிக்கோளுடன் நான் கிளம்பினேன்
  81. வெளியே வந்து சிறந்த பயிற்சியை
    பெறுவது என்று
  82. எவ்வளவு வேகமாக எனது வாழ்க்கையை புனரமைக்க முடியுமோ அதை செய்தேன்.
  83. ஆறே மாதங்களில் நான்
    வேலைக்கு திரும்பினேன்.
  84. எனது பயிற்சி ஆரம்பித்தது.
  85. எனது பழைய மிதி
    வண்டி நண்பர்களுடன்,
  86. இருவர் ஓட்ட கூடிய மிதி
    வண்டியை கூட நான் ஓட்டினேன்.
  87. எனது வேலைக்கு
    நானாகவே சென்று வந்தேன்,
  88. நடந்தும், பேரூந்துகளில் சென்றும்
  89. அதற்கு கடினமாக
    உழைக்க வேண்டியிருந்தது.
  90. ஆனால் நான் சற்றும் எதிர்பாராதது
  91. அந்த வேகமான மாற்றம் மூலம் நடந்த
  92. நம்பமுடியாத பக்க அணிமை நிலை அனுபவம்
  93. பார்வையுடன் இருந்த அனுபவத்திற்கு எதிரிடையாக பார்வையில்லாத அனுபவங்கள்
  94. அதே இடங்கள் அதே மக்கள் குறித்து
  95. அந்த குறுகிய காலகட்டத்தில்
  96. அதன் மூலம் எனக்கு நிறைய
    உள்ளுணர்வு கிடைத்தது
  97. அதை நான் வெளியுணர்வு என்று சொல்வதுண்டு,
  98. அதாவது பார்வை இழந்த பின்பு நான்
    கற்று கொண்டவைகள்
  99. இந்த வெளியுணர்வுகள்
    அற்பமானது முதல்
  100. ஆழ்ந்த அறிவுள்ளவரை இருந்தது,
  101. உலக வாழ்க்கைக்குரியது முதல் நகைச்சுவைக்குரியது வரை இருந்தது
  102. ஒரு கட்டிட கலைஞராக எனக்கு ஏற்பட்ட
    மறையற்ற பக்க அணிமை நிலை
  103. அனுபவங்கள் பார்வையுடனும்
    பார்வையில்லாமலும்
  104. அதே இடத்தை பற்றியும்
    அதே நகரங்களை பற்றியும்
  105. அந்த குறைந்த கால நேரத்தில்
  106. எனக்கு எல்லாவிதமான அற்புதமான
    வெளியுணர்வுகளையும் கொடுத்தது
  107. அந்த நகரத்தை பற்றி.
  108. அவற்றுள் தலையானது
  109. உண்மையில் எனக்கு
    ஏற்பட்ட உணர்தல்.
  110. அதாவது நகரங்கள் தான் பார்வை இல்லாதவர்களுக்கான அருமையான இடம்
  111. இன்னொரு விஷயமும் எனக்கு வியப்பை தந்தது
  112. நகரத்தில் இருக்கும் இரக்கம் அக்கறை
    குறித்த மனபாங்கு
  113. மெத்தனம் அல்லது அதைவிட
    மோசமாக இருப்பதற்கு மாறாக
  114. அப்பொழுது நான் ஒன்றை
    உணர ஆரம்பித்தேன்
  115. பார்வையற்றவர்களால்
  116. நகரத்திற்கே ஒரு நேரிய
    பாதிப்பு ஏற்படுகிறது
  117. இதை பற்றி தெரிந்து கொள்ள என்னிடம்
    ஒரு சிறிய ஆர்வம் ஏற்பட்டது
  118. சற்று பின் சென்று நான் இதை நோக்கினேன்
  119. நகரத்தில் பார்வையற்ற்வர்களிடம்
    ஏன் நன்றாக நடந்து கொள்கிறார்கள்
  120. பார்வை இழப்பில் இருந்து மீள எடுக்கும்
    பயிற்சியில் உள்ள உற்ற விடயம்
  121. பார்வையை தவிர்த்து மற்ற புலன்களை
    சார்ந்திருக்க கற்று கொள்வது தான்
  122. மற்றபடி இவைகள் எல்லாம் நாம்
    புறகணிப்பவை தான்
  123. புலன்கள் பற்றிய தகவல்கள்
    நிறைந்த ஒரு புது உலகம்
  124. உங்களுக்காக திறந்து கொள்கிறது.
  125. ஒரு பல்லிய இசை என்னை தாக்கியது
  126. அது நகரத்தில் என்னை சுற்றி நான்
    கேட்ட நுட்பமான ஒலிகள்
  127. அந்த ஒலிகளை நீங்கள் கேட்க முடியும்
    அதன் மூலம் செயல் பட முடியும்
  128. நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று
    புரிந்து கொள்ள முடியும்
  129. எப்படி நகர வேண்டும் எங்கு செல்ல
    வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்
  130. அதை போல கைத்தடியின்
    பிடிமானத்தை வைத்து
  131. கீழிருக்கும் தளத்தின் மாறுபட்ட
    தன்மைகளை புரிந்து கொள்ளலாம்
  132. காலபோக்கில் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் எனபது
    குறித்து ஒரு படிவத்தை கட்டமைப்பீர்கள்
  133. எங்கு போய் கொண்டிருகிறீர்கள்
    என்று தெரிந்து கொள்வீர்கள்
  134. அதே போல முகத்தின் ஒரு பக்கம்
    அடிக்கும் வெயில்
  135. அல்லது கழுத்தில் படும் காற்று
  136. ஒரு துப்பு தரும் உங்களது சீரமைவு குறித்து
  137. அந்த வட்டாரத்தில் உங்கள்
    முன்னேற்றம் குறித்து,
  138. காலம் வெளி அமைவுகளில் உங்களது
    நகர்வுகள் குறித்து
  139. அதே போல நுகர் புலனும் தருகிறது.
  140. சில மாவட்டங்களுக்கும் நகரங்களுக்கும் என்று
    தனியாக ஒரு வாசனை உள்ளது
  141. இடங்களுக்கும் உங்களை சுற்றி இருக்கும் பொருட்களுக்கும் உள்ளது போல
  142. அதிர்ஷ்டம் இருந்தால் உங்களது மூக்கை பின்பற்றியே போகலாம்
  143. நீங்கள் தேடும் ரொட்டி கடைக்கு
  144. இவையெல்லாம் உண்மையாகவே
    என்னை வியக்க வைத்தது
  145. ஏனெனில் நான் உணர ஆரம்பித்தேன்
  146. எனது பார்வையற்ற அனுபவம்
  147. மிகுதியாக பல புலன்கள்
    சார்ந்ததாக இருந்தது
  148. பார்வையோடு இருந்த எனது
    அனுபவத்தை விட
  149. என்னை மிகவும் பாதித்த இன்னொன்று
    என்னை சுற்றி இருக்கும் நகரம்
  150. எவ்வளவு வேகத்தில்
    மாறியது என்பது தான்
  151. உங்களுக்கு பார்வை
    இருக்கும் பொழுது
  152. மற்றவர்கள் எல்லாம் அவரவர்கள்
    வேலையோடு நின்றுகொண்டார்கள்
  153. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்
  154. ஆனால் நீங்கள் பார்வையை இழந்தாலோ,
  155. கதை வேறு விதமாக மாறி விடும்.
  156. யார் யாரை பார்கிறார்கள் என்று எனக்கு தெரியாது,
  157. நிறைய நபர்கள் என்னை பார்க்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
  158. நான் கருத்து திரிபு செய்வதில்லை .
    எல்லா இடங்களுக்கும் செல்கிறேன்
  159. எனக்கு எல்லா விதமான
    ஆலோசனைகளையும் சொல்கிறார்கள்
  160. இந்த பக்கம் போங்கள் , அந்த பக்கம் நகருங்கள் ,
    இந்த இடத்தில் கொஞ்சம் கவனம் தேவை
  161. நிறைய தகவல்கள் நல்லது தான்.
  162. பயனுள்ளவையாக இருக்கிறது .
    பெரும்பாலும் எதிர்மறையாக இருக்கிறது
  163. என்ன சொல்கிறார்கள் என்று புரிந்து
    கொள்ள வேண்டியிருக்கிறது
  164. சிலது தவறாக இருக்கிறது
    .பயனுள்ளதாகவும் இல்லை
  165. ஆனால் ஒரு உயரிய திட்டம் என்று எடுத்துகொண்டால் அவை நன்றாக இருக்கிறது
  166. ஒரு சமயம் நான் ஓக்லாண்டில் இருந்தேன்
  167. பிராட்வே வழியாக நடந்து
    ஒரு ஓரத்திற்கு வந்தேன்
  168. பாதசாரிகளுக்கான
    ஒலிக்காக காத்திருந்தேன்
  169. அந்த ஒலி கேட்ட உடனே நான்
    தெருவில் இறங்க தயாரானேன்
  170. திடீரென்று எனது வலது கையை
  171. ஒருவர் அழுத்தி பிடித்தார்,
  172. என் கையை வெடுக்கென்று இழுத்து
    பாதையை கடக்க முயன்றார்
  173. என்னுடன் மண்டாரின்
    மொழியில் பேசிக்கொண்டே
  174. என்னை இழுத்தபடி தெருவின் குறுக்காக நடந்தார்,
  175. (சிரிப்பொலி)
  176. அவரின் மரண பிடியில் இருந்து தப்புவதற்கு வழியே இல்லை என்று தோன்றியது,
  177. ஆனால் என்னை பாதுகாப்பாக
    அங்கு கொண்டு சென்றார்
  178. என்னால் என்ன செய்ய முடியும்?
  179. நான் சொல்வதை நம்புங்கள்
    இன்னும் கண்ணியமான முறையில்
  180. இந்த உதவிகளை செய்யலாம்.
  181. நீங்கள் அங்கு இருக்கிறீர்கள் என்று
    எங்களுக்கு தெரியாது
  182. அதனால் முதலில் ஒரு 'ஹலோ'
    சொல்வது மிகவும் நன்றாக இருக்கும்
  183. " உங்களுக்கு உதவி தேவை படுகிறதா ? "
    என்று கேட்கலாம்
  184. ஆனால் ஓக்லாண்டில் இருந்த பொழுது
  185. அந்த நகரம் எப்படி மாறிவிட்டது
    என்பது எனக்கு வியப்பாக இருந்தது
  186. நான் பார்வையை இழந்த பிறகு
  187. பார்வை இருந்த போது அந்த நகரம் எனக்கு பிடித்திருந்தது .நன்றாக இருக்கும்
  188. நிறைவான ஒரு சிறந்த நகரம்
  189. ஆனால் எனக்கு பார்வை போன பின்பு
  190. ஒரு முறை நான் பிராட்வே வழியாக
    நடந்து கொண்டிருந்தேன்
  191. எல்லா இடங்களிலும் என்னை வாழ்த்தினார்கள்.
  192. "வாழ்த்துக்கள் ஐயா"
  193. "போங்கள் சகோதரா"
  194. "கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்."
  195. எனக்கு பார்வை இருந்த பொழுது
    இந்த ஆசிகள் எனக்கு கிடைக்கவில்லை.
  196. (சிரிப்பொலி)
  197. பார்வை இல்லாமல் இருந்தால் கூட
    சான் பிரான்சிஸ்கோவில் இது கிடைக்காது.
  198. எனது பார்வையற்ற சில நண்பர்களை
    இது பாதித்தது எனக்கு தெரியும்
  199. என்னை மட்டும் அல்ல.
  200. அடிக்கடி நினைத்து கொள்கிறோம்
  201. அனுதாபம் காரணமாக ஏற்படும்
    ஒரு உணர்ச்சி அது என்று
  202. நான் நினைக்கிறேன் நாம் மனிதாபிமானத்தை
    பகிர்ந்து கொள்கிறோம் என்று
  203. நாம் ஒருசேர வாழ்வதினால் அங்கு
    அது ஒரு அமைதியான சூழல் இருக்கிறது
  204. .உண்மையில் நான் சற்று தளர்ந்து
    போயிருக்கும் நேரத்தில்,
  205. ஓக்லாண்ட் நகரத்தின்
    மைய பகுதிக்கு செல்வேன்,
  206. ஒரு உலா சென்று வருவேன் .
    நலம் பெற்றது போல
  207. சிறிது நேரத்திலேயே தோன்றும்.
  208. மேலும் அது எடுத்துரைப்பது
    என்னவென்றால்
  209. உடல் ஊனம் மற்றும்
    பார்வையற்ற தன்மை
  210. இனம் சமூகம் சாதி ,
  211. பொருளாதாரம் போன்ற வேறுபாடுகளை
    தாண்டி பாதிப்பை ஏற்படுத்துகிறது
  212. உடல் ஊனம் எலோருக்கும்
    சம வாய்ப்பை அளிக்க வல்லது
  213. எல்லோரும் அங்கு
    வரவேற்க்கப்படுகிறார்கள்
  214. உண்மையில் நான் கேள்விபட்டிருக்கிறேன்
    உடல் ஊனமுற்றோர் சமூகத்தில்
  215. இரண்டு விதமான மனிதர்கள்
    இருப்பார்கள் என்று
  216. ஊனமுற்றோர் ஒரு பக்கமும்,
  217. மறுபக்கத்தில் அவர்களது ஊனம்
    என்னவென்றே தெரியாதவர்களும்
  218. இது சற்று வித்தியாசமான பார்வை
  219. ஆனால் அது மிக அழகாக இருக்கிறது
    என்று நான் நினைக்கிறேன்
  220. ஏனெனில் அது அனைத்தையும்
    உட்கொண்டது
  221. அதாவது நாங்களும் - நீங்களும்
    என்று எதிர்நிலையில் இருப்பதை விட
  222. அல்லது உடல் வலிவுள்ளவர்
    உடல் வலிமை இழந்தவர் என்பதை விட
  223. மேலும் அது நேர்மையான மதிப்பிற்குரிய
  224. எளிதில் அழிய கூடிய வாழ்க்கை
    குறித்த ஒரு கணிப்பீடு.
  225. அதனால் எனது இறுதி
    கருத்து என்னவென்றால்
  226. இந்த நகரம் பார்வையற்றவர்களுடன்
    நன்றாக நடந்து கொள்கிறது மட்டுமல்ல
  227. இந்த நகரத்திற்கும் நாங்கள்
    தேவைபடுகிறோம் என்பதும் தான்
  228. ஒரு விஷயம் எனக்கு மிக
    உறுதியாக தெரிகிறது
  229. நான் இன்று உங்களிடம்
    முன்மொழிய விரும்பிகிறேன்
  230. பார்வையற்றவர்களை நகரத்தில் வாழும் மூல முன் மாதிரியாக கருத்தில் கொள்ளுங்கள்
  231. அழகான புது நகரங்களை உருவாக்க
    கற்பனை செய்யும் பொழுது
  232. மாறாக கடைசியில் நினைவு
    கொள்ள வேண்டியவர்கள் அல்ல
  233. அதாவது நகர வடிவமைப்பு எல்லாம் முடிந்த பிறகு
  234. அப்பொழுது காலம் கடந்து விடும்.
  235. ஒரு நகரத்தை வடிவமைக்கும் நேரத்தில்
    பார்வையற்றவர்களை மனதில் கொள்ளுங்கள்
  236. நிறைவான பாதசாரிகளுக்கான
    நடைபாதைகள் இருக்க வேண்டும்
  237. அதில் செறிந்த விருப்ப தேர்வுக்கு
    வாய்ப்புகள் இருக்க வேண்டும்
  238. இவை எல்லாம் தெரு மட்டத்தில் இருக்க வேண்டும்.
  239. பார்வையற்றவர்களை மனதில் கொண்டு
    நகரம் வடிவமைக்கபட்டால்,
  240. நடைபாதைகள் அறியகூடியதாகவும்
    தாராளமாகவும் இருக்கும்
  241. கட்டிடங்களின் இடைவெளி நன்றாக
    சமநிலை படுத்தபட்டிருக்கும்
  242. அதே போன்று மகளுக்கும் கார்களுக்கும்
    உள்ள இடைவெளி
  243. சொல்ல போனால் யாருக்கு
    கார்கள் தேவை படும் ?
  244. நீங்கள் பார்வையற்றவர் என்றால்
    கார் ஓட்டபோவதில்லை. (சிரிப்பொலி)
  245. நீங்கள் ஓட்டினால் அவர்களுக்கு
    பிடிப்பதில்லை. (சிரிப்பொலி)
  246. பார்வையற்றவர்களை மனதில் கொண்டு
    நகரம் வடிவமைக்கபட்டால்,
  247. திடமான எளிதில் அடையக்கூடிய,
  248. இணைக்கப்பட்ட திரளான மக்கள் பயணம்
    செய்யகூடிய அமைப்பு தேவை
  249. நகரத்தின் எல்லா பகுதிகளையும் அது
    இணைக்க வேண்டும்
  250. சுற்று வாட்டார பகுதிகளையும்
    இணைக்க வேண்டும்
  251. பார்வையற்றவர்களை மனதில் கொண்டு
    நகரம் வடிவமைக்கபட்டால்
  252. அங்கு நிறைய வேலை வாய்ப்புகள்
    இருக்க வேண்டும்
  253. பார்வையற்றவர்கள் வேலை பார்க்க
    விருப்பம் உள்ளவர்கள்
  254. அவர்கள் சம்பாதித்து வாழவேண்டும்
    என்று நினைப்பவர்கள்
  255. அதை பார்வையற்றவர்களுக்கான
    ஒரு நகரம் வடிவைக்கும் பொழுது
  256. நீங்கள் உணர்வீர்கள் என்று நினைக்கிறேன்
  257. அது எல்லோரையும் உள்ளடக்கிய
  258. நியாயமான நேர்மையான நகரமாக
    எல்லோருக்கும் இருக்கவேண்டும்
  259. பார்வையுடன் இருந்தபொழுது கிடைத்த
    அனுபவத்தின் அடிப்படையில்
  260. அது ஒரு அழகான அமைதியான நகரம்
  261. நீங்கள் பார்வையற்றவரோ அல்லது
    ஊனமுற்றவரோ
  262. அல்லது உங்களது ஊனம் என்னவென்று
    தெரியாதவரோ யாராக இருந்தாலும் சரி
  263. நன்றி.
  264. (கைதட்டல்)

    (கை தட்டல்கள் )


No comments:

Post a Comment