Friday, September 17, 2021

நினைவுச்சின்னங்கள்

வீரர்களை நினைவு கூர்ந்து நடுகல் வழிபாடு இருந்ததாக சொல்லப்படும் எமது பாரம்பரியத்தில் சினைவுச்சின்னங்கள் , நினைவுத்தூபிகள் வைப்பது என்பது எப்போது இருந்து எமது கலாசாரத்தில் இருந்து என்னால் எதுவும் உறுதியாக கூறமுடியாது ஆனாலும் பிற நாடுகளில் பல்வேறு விதமான நினைவுச்சின்னங்கள் போர் வெற்றி, முக்கிய நிகழவுகளை நினைவுபடுத்தி வைப்பதும், நாட்கள் செல்ல அவை  குறிப்பிட்ட இடங்களின் அடையாளமாகவும் மாறுகின்ற சந்தர்பங்கள் இருக்கின்றது. ஒன்றை ஒன்று பார்த்து ஒருவரைப் போல மற்றவர் செய்வது இன்று சாதாரணமானது....அந்த வகையில் நினைவுச்சின்னங்களை நாங்களும் பிரதி எடுத்த சந்தர்பங்களும் உண்டு இதனால் வரலாற்றில் நினைவுச்சின்னங்களுக்கு எப்போதும் தனியிடம் உண்டு.....

 

ஈழத்தில் காணமல் போனவர்கள் சிலருக்கு நினைவுச்சின்னம் அமைத்த காரணத்தால் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் பொலீசாரால் விசாரணை என்ற செய்தி படித்தபோது இன்னொருவிடயம் என்னுடைய கண்ணில் பட்டது. தாய் தந்தையருக்கும் நினைவுத்தூபி அமைத்துள்ளார் என்பதும், அதில் டிஎன்ஏ இன் மாதிரியும் வைக்கப்பட்டுள்ளது என்பதும் ஆகும். வழமை போல ஊடகங்கள் தங்களுக்குத் தேவையான விடயங்களை மையப்படுத்தி பல முக்கிய விடயங்களை விழுங்கி விடுவதால்....... நான் அறிந்தவற்றை பகிர்ந்து கொள்ளவே இந்தப்பதிவு.....

யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற முக்கிய நினைவுச்சின்னங்களுக்கும் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயாவிற்கும் மிகநெருங்கிய தொடர்பு இருப்பது உங்களில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.



பல்வேறு மதரீதியான அரசியல் சர்ச்சையில் இருப்பவர் அவர் இருந்தாலும் தாய் தந்தையருக்கு நினைவுச்சின்னம் அமைத்தவர் என்ற வகையில் அவரை நேரில் சந்தித்தேன். அவர் கூறியவற்றை எனது புரிதலுடன் எழுதுகின்றேன்.



சைவ சித்தாந்தத்தில் பதி, பசு, பாசம் என்ற என்ற முப்பொருள் குறிப்பிடப்படுகின்றது. இவை அநாதி அதாவது தொடக்கமும் முடிவும் இல்லாதவை. இதில் பசுவை (உயிரை) டிஎன்ஏ என அவர் கொள்கின்றார். அதாவது டிஎன்ஏக்கும் பசுவிற்கும் (உயிருக்கும்) ஒரே இயல்பு எனக்கொண்டு தன்னுடைய நினைவுச்சின்ன வடிவமைப்பில்  டிஎன்ஏ இற்கும் ஒரு இடம் கொடுத்துள்ளார்.  மேலும்  பதியான கடவுளை நோக்கி பசு எப்போதும் நகரும் இதனை  கட்டடக்கலையில் அடி பருத்து நுனி ஒடுங்கிய வடிவில் அமைத்து வெளப்படுத்தலாம் என்று எம் முனனோர்கள் தங்களுடையடைய பல்வேறு கட்டக்கலைப்படைப்புகளில் பின்பற்றி உள்ளார்கள் அதனால் தான் வடிவமைத்த தாய் தந்தையருக்கான நினைவுத்தூபியின் உச்சியில் இந்த உத்தியைக் கையாண்டு உள்ளார்.

 

இனிச்சொல்லப்போவது ஒரு வரலாற்றுத்தகவல்.....

 



யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் அரசியல் பண்பாட்டு எழுச்சியில் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயாவின் பங்கு முக்கியமானதாக இருந்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் 4ஆவது உலகத்தமிழராட்சி மாநாட்டை நடத்தியவர்களில் முக்கியமானவர்.....அதன் போது ஏற்பட்ட கலவரத்தில்  இறந்து போன பொதுமக்களுக்கு நினைவுத்தூபி அமைத்தவர்களில் முக்கியமானவர்.....

தந்தை செல்வா அவர்கள் இறந்தவேளை ஒரு ரூபா பெறுமதியான கொடிகள் அடித்து மக்களிடம் இருந்து 30 ஆயிரம் ரூபா பணம் சேர்த்து நினைவுத்தூபி அமைப்பதற்கு அடி எடுத்துகொடுத்தது மட்டுமல்ல....அதனை கட்டடக்கலைஞர் V.S. துரைராஜா அவர்களைக் கொண்டு வடிவமைத்து, கட்டப்பட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் இன்னொரு கட்டடக்லைஞரும் காந்தியவாதியுமான டேவிற் அவர்களுடைய ஆலோசனையை ஏற்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தூபியின் அளவிற்கு அதிகமாகவும், கோவில் கட்டடக்கலையில் பின்னபற்றப்படும் விமானத்தை தூபியின் உச்சியில் அமைப்பதற்கு  ஏற்பாடுகள் செய்தவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

இந்த நினைவுத்தூபி தற்போது மீண்டும் சமயச்சிக்கலில் சிக்கி அரசியலாக மாறிக்கொண்டு இருப்பது பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.....

 

இன்னும் ஒரு பண்பாட்டுப்புரட்சி நிகழப்போகின்றது....

 



இதுவரை காலமும் இல்லாத வகையில் 50 அடி நீள அகலம் கொண்ட கருவறை அமைத்து,  25 அடி நீள அகலம் கொண்ட முன் மண்டபம் உடைய பிள்ளையார் கோவில் கட்டப்பட்டு வருகின்றது. இந்தக் கோவிலின் கருவறை மேல்108 அடி உயரமான விமானம் கட்டப்படவுள்ளது. இங்கு வழமையான  கோவில் கட்டும்  விதி முறைகள் இல்லை....அடியார்கள் கருவறைக்குள் செல்லலாம், நேரடியாகவே பிள்ளையாருடன் கதைக்கலாம், படைக்கலாம், கும்பிடலாம். இந்தக் கோவிலுக்கு அருகில் அழகான குளம்....இதுவும் மறன்வன்புலவில் சச்சிதானந்தம் ஐயா மேற்கொண்டு வரும் பண்பாண்டுப்புரட்சிக்கான வித்து

கடட்டடக்கலைஞர். கு. பதீதரன்

No comments:

Post a Comment